ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் வீரர்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் வீரர்கள்

1 mins read
60f56cc5-3aae-4250-bbc0-dde671fcdf76
சிங்கப்பூர் வாட்சண்டை வீராங்கனை அமிதா பெர்த்தியர் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தோக்­கியோ: வாட்­சண்­டைப் போட்­டி­யில் ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் முதன்­மு­றையா­கப் பங்­கேற்ற சிங்­கப்­பூ­ரின் அமிதா பெர்த்­தி­யர், விளை­யாட்­டு­களில் மூன்று முறை பங்­கேற்­றுள்ள அமெ­ரிக்­கர் லீ கீஃப­ரி­டம் தோல்­வி­யுற்­றார். 4-15 எனும் புள்ளி விவ­ரத்­தில் பெர்த்­தி­யர் தோல்­வி­யுற்­றார்.

பெண்கள் ஒற்றையர் மேசைப் பந்து பிரிவில் சிங்கப்பூரின் யூ மெங்யூ மூன்றாம் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார். போர்ச்சுகலின் ஷாவ் ஜியெனியை 4-0(11-3, 11-2, 11-8, 11-9) எனும் ஆட்டக் கணக்கில் வென்றார் யூ.

எனினும், ஆண்கள் ஒற்றையர் மேசைப் பந்து பிரிவில் சிங்கப்பூரின் கிளேரன்ஸ் சியூ இரண்டாம் சுற்றில் ேதால்வியுற்றார். ஆஸ்திரியாவின் டேனியல் ஹாபசொன் அவரை 4-1(11-7, 11-8, 11-8, 6-11, 12-10) எனும் ஆட்டக் கணக்கில் வென்றார்.

ஆண்கள் 100 மீட்டர் மல்லாந்து நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினார் சிங்கப்பூரின் குவா செங் வென்.

ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூருக்கு முதன்முறையாகத் தங்கம் வென்ற ஜோசஃப் ஸ்கூலிங், நாளை 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் தகுதிச்சுற்றில் பங்கேற்பார்.