தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக்: ஜோசஃப் ஸ்கூலிங் தகுதிபெறவில்லை

1 mins read
4a1e620e-8620-497f-9d14-7d91f3b507fb
ஜோசஃப் ஸ்கூலிங். படம்: சாவ்பாவ் -

100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியுள்ளார் ஜோசஃப் ஸ்கூலிங்.

தகுதிச் சுற்றில் ஆறாவதாக வந்த ஸ்கூலிங் எடுத்துக்கொண்ட நேரம் 49.84 வினாடி.

பிரேசிலில் நடைபெற்ற சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதே பிரிவின் தகுதிச் சுற்றில் ஸ்கூலிங் எடுத்துக்கொண்ட நேரம் 48.27 வினாடி.

நாளை மறுநாள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலின் தகுதிச் சுற்றில் ஸ்கூலிங் போட்டியிடுவார். அந்தப் பிரிவில்தான் சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் ஸ்கூலிங்.

ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூர் வென்ற முதல் தங்கப் பதக்கம் அது.

உடல்ரீதியாகத் தயாராக இருப்பதாகவும், இனி மனத்தளவில்தான் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் இன்றைய தகுதிச் சுற்றுக்கு முன் ஸ்கூலிங் தெரிவித்திருந்தார்.

போட்டி நெருங்க நெருங்க தனக்குள் இருக்கும் சாதனைத் தீ கொழுந்துவிட்டு எரிவதாக அவர் சொன்னார்.