ஸ்கூலிங் தகுதிபெறவில்லை

ஸ்கூலிங் தகுதிபெறவில்லை

1 mins read
41e99086-723c-45f7-801e-b8163f2c3a43
ஆண்கள் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­றத் தவ­றி­னார் சிங்­கப்­பூர் நட்­சத்­தி­ரம் ஜோசஃப் ஸ்கூ­லிங். சென்ற ஒலிம்­பிக்­கில் ஸ்கூலிங் எதேச்சை பாணி நீச்­ச­லில் பங்கேற்கவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தோக்­கியோ: 100 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­சல் போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­றத் தவறி­யுள்­ளார் ஜோசஃப் ஸ்கூ­லிங்.

தகு­திச் சுற்­றில் ஆறா­வ­தாக வந்த ஸ்கூ­லிங் எடுத்­துக்­கொண்ட நேரம் 49.84 வினாடி.

பிரே­சி­லில் நடை­பெற்ற சென்ற ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் இதே பிரி­வின் தகு­திச் சுற்­றில் ஸ்கூ­லிங் எடுத்­துக்­கொண்ட நேரம் 48.27 வினாடி.

நாளை 100 மீட்­டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்­ச­லின் தகு­திச் சுற்­றில் ஸ்கூ­லிங் போட்டியிடு­வார். அந்­தப் பிரி­வில்­தான் சென்ற ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார் ஸ்கூ­லிங்.

ஒலிம்­பிக் வர­லாற்­றில் சிங்­கப்பூர் வென்ற முதல் தங்­கப் பதக்­கம் அது.

உடல்­ரீ­தி­யா­கத் தயா­ராக இருப்­ப­தா­க­வும், இனி மனத்­த­ள­வில்­தான் தன்னை ஆயத்­தப்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும் என்­றும் நேற்றைய தகு­திச் சுற்­றுக்கு முன் ஸ்கூ­லிங் தெரி­வித்­தி­ருந்­தார்.

போட்டி நெருங்க நெருங்க தனக்­குள் இருக்­கும் சாதனைத் தீ கொழுந்­து­விட்டு எரி­வ­தாக அவர் சொன்­னார்.