நட்சத்திரத்தை பின்னுக்குத் தள்ளிய 17 வயது பெண்

நட்சத்திரத்தை பின்னுக்குத் தள்ளிய 17 வயது பெண்

2 mins read

தோக்கியோ: 100 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியில் தங்கத்தைக் கைப்பற்றினார் அமெரிக்க வீராங்கனை லிடியா ஜேக்கபி.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதன்முறையாகப் பங்கேற்கும் ஜேக்கபி எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 4.95 வினாடி.

ஜேக்கபியின் வெற்றி அவருக்கே இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. மூன்றாவது இடத்திலிருந்த அவர், கடைசி 15 மீட்டர் தூரத்தில் அபாரமாக நீந்தி முதலிடத்திற்கு வந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

போட்­டியை மற்­றோர் அமெ­ரிக்­க­ரான லில்லி கிங் வெல்­வார் எனப் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. சென்ற ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளின் 100 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­சல் போட்­டி­யில் தங்­கம் வென்ற கிங், அந்த பிரி­வில் இரண்டு முறை உல­கப் போட்டிகளை­யும் வென்­ற­வர்.

பதக்­கத்தை வெல்­வ­தற்­கான ஆற்­றல் தன்­னி­டம் உள்­ளது என்ற நம்­பிக்கை இருந்­தா­லும் தங்­கம் கிட்­டும் எனத் தான் எதிர்­பார்க்­க­வில்லை என்­றார் ஜேக்­கபி. அமெரிக்­கா­வின் அலாஸ்கா மாநிலத்­தைச் சேர்ந்­த­வர் ஜேக்­கபி.

முதன்­மு­றை­யாக அம்­மா­நிலத்­தைச் சேர்ந்த ஒரு­வர் ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் தங்­கம் வென்றி­ருக்­கி­றார்.

அலாஸ்காவில் ஒலிம்பிக் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யும் பரப்பளவைக் கொண்ட ஒரு நீச்சல் குளம் மட்டுமே அமைந்துள்ளது. அதுவும் ஜேக்கபியின் விட்டிற்கு சுமார் 202 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கத்தை வென்­றார் தென்னாப்பிரிக்காவின் டாயானா ஷோன்­மாக்­கர். கிங், வெண்­க­லத்தை வென்­றார்.

பெண்­கள் 100 மீட்­டர் மல்­லாந்த நீச்­ச­லில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கேலீ மெக்­கி­யோன் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

அவர் 57.47 வினாடியில் போட்டியை முடித்து தங்கத்தை வென்றார். கனடாவின் கைலி மேஸி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமெரிக்காவின் ரீகன் ஸ்மித்.

மெக்கியோனும் ஸ்மித்தும் வைரிகள்.

ஆண்கள் 200 மீட்டர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டியில் பிரிட்டனின் டாம் டீன் தங்கம் வென்றார். போட்டியில் சற்று பின்தங்கியிருந்த டீன், கடைசி 50 மீட்டர் தூரத்தில் சிறப்பாக நீந்தி தங்கத்தைக் கைப்பற்றினார்.

1 நிமிடம் 44.22 வினாடியில் முடித்து தேசிய சாதனை படைத்தார் டீன்.

வெள்ளிப் பதக்கத்தை வென்றார் பிரிட்டனின் மற்றொரு வீரர் டன்கன் ஸ்காட். பிரேசிலின் ஃபெர்னாண்டோ ஷெஃபர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.