ஜப்பானின் ஒசாக்கா அதிர்ச்சி தோல்வி

தோக்­கியோ: ஜப்­பா­னிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாக்கா ஒலிம்­பிக் விளையாட்டு­க­ளின் பெண்­கள் ஒற்­றை­யர் போட்­டி­யி­லி­ருந்து எதிர்­பாராத வித­மாக வெளியேற்றப்­பட்­டுள்­ளார்.

போட்­டி­யின் மூன்­றாம் சுற்­றில் செக் குடி­ய­ர­சின் மார்­கெட்டா வொண்ட்­ரூ­சோ­வா­வி­டம் 6-1, 6-4 எனும் செட் விகி­தத்­தில் தோல்­வி­யுற்­றார் ஒசாக்கா.

பெண்­கள் டென்­னிஸ் உல­கத் தர­வ­ரி­சை­யில் முத­லி­டத்தை வகிக்­கும் அஸ்­தி­ரே­லி­யா­வின் ஏஷ்­லேய் பார்டி அண்­மை­யில் போட்­டி­யி­லி­ருந்து எதிர்­பாரா வகை­யில் வெளி­யேற்­றப்­பட்­டார். அத­னைத் தொடர்ந்து உல­கத் தர­வ­ரி­சை­யில் ஆக உய­ரிய இடத்­தில் இருந்த ஒலிம்­பிக் வீராங்­க­னை­யாக ஒசாக்கா விளங்­கி­னார். ஒவ்­வொரு தோல்­வி­யும் தனக்கு வருத்­தத்தை தந்­தா­லும் இந்­தத் தோல்­வி­தான் ஆக அதிக வேத­னை­யைத் தரு­வ­தாக நான்கு முறை டென்­னிஸ் கிராண்ட் சிலாம் விருது­களை வென்­றி­ருக்­கும் ஒசாக்கா தெரி­வித்­தார். ஆட்­டம் முழு­வ­தும் ஒசாக்கா பல தவ­று­க­ளைச் செய்­தார்.

மன­ந­லப் பிரச்­சி­னையை எதிர்­கொண்­ட­தால் சென்ற விம்­பிள்­டன் டென்­னிஸ் போட்­டி­யி­லி­ருந்து வில­கிக்­கொண்ட ஒசாக்­கா­விற்­குக் கடந்த சில மாதங்­கள் வருத்­தம் தரும் வகை­யில் அமைந்­துள்­ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!