பதக்கத்தை நெருங்கும் சிங்கப்பூரர்

பதக்கத்தை நெருங்கும் சிங்கப்பூரர்

2 mins read
8e9749df-4360-4544-b4df-0cb169ef8d03
இன்று நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் யு மெங்யு உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனாவின் சென் மெங்கை எதிர்த்து விளையாடவிருக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: இன்­னும் ஒரே ஒரு போட்­டி­யில் வென்­று­விட்­டால் போதும், சிங்­கப்­பூர் மேசைப்­பந்து வீராங்­கனை யு மெங்­யு­வின் ஒலிம்­பிக் பதக்­கக் கனவு நன­வா­கி­விடும்.

மக­ளிர் ஒற்­றை­யர் பிரிவு காலி­று­திப் போட்­டி­யில், உல­கின் பத்­தாம் நிலை வீராங்­க­னை­யான ஜப்­பா­னின் கசுமி இஷி­கா­வாவை 8-11, 11-5, 14-12, 11-6, 11-2 என்ற புள்ளிக் கணக்­கில் தோற்­க­டித்து அதிர்ச்சி அளித்­தார் 31 வயதான மெங்யு.

தொடக்க விழா­வில் பூப்­பந்து ஆட்­டக்­கா­ரர் லோ கீன் இயூ­வு­டன் சேர்ந்து சிங்­கப்­பூர்க் கொடியை உயர்த்­திப் பிடித்­துச் சென்ற மெங்யு, இந்த வெற்றி தமக்கு எளி­தா­கக் கிடைக்­க­வில்லை என்­றார்.

"எதி­ராளி நேர்த்­தி­யாக ஆடி­ய­தால் அவரை எதிர்­கொள்­வது கடி­ன­மாக இருந்­தது," என்­றார் மெங்யு.

மூன்றாவது செட்டே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக இவர் குறிப்பிட்டார்.

"10-8 என்று பின்­தங்­கி­ய­போ­தும் ஒரு­வா­றாக சில புள்­ளி­களை நான் கைப்­பற்­றி­விட்­டேன். அது எனக்கு ஊக்­க­ம­ளிக்­கவே, எதி­ராளியை நெருக்­க­டிக்கு உள்ளாக்கினேன்," என்று மெங்யு சொன்னார்.

அடுத்­த­தாக, இன்று நடக்க உள்ள அரை­யி­று­தி­யில் மெங்யு, உல­கின் முதல்­நிலை ஆட்­டக்­கா­ர­ரான சீனா­வின் சென் மெங்­கு­டன் பொரு­த­வி­ருக்­கி­றார்.

காலிறுதியில் சென் மெங் 12-10, 11-9, 11-6, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கின் டூ ஹோய் கெம்மை வீழ்த்தினார்.

அரை­யி­று­தி­யில் மெங்யு வெற்றி பெற்­றால் குறைந்­தது வெள்­ளிப் பதக்­கம் உறு­தி­யா­கி­வி­டும். இல்­லை­யேல், வெண்­க­லப் பதக்­கத்­திற்­கான போட்­டி­யில் இவர் விளை­யாட வேண்­டி­யி­ருக்­கும்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரின் முதல்­நிலை வீராங்­க­னை­யும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்­கம் வென்­ற­வ­ரு­மான ஃபெங் டியான்வை, காலி­று­திக்கு முந்­திய சுற்­றில் ஜெர்­மனி­யின் ஹன் யிங்­கி­டம் 13-11, 11-7, 11-9, 8-11, 11-8 என்ற புள்­ளிக் கணக்­கில் தோற்­றுப்­போ­னார்.