காற்பந்து: பிரேசில் உள்ளே, ஜெர்மனி வெளியே

காற்பந்து: பிரேசில் உள்ளே, ஜெர்மனி வெளியே

1 mins read

தோக்­கியோ: நடப்பு வெற்­றி­யா­ள­ரான பிரே­சில், ஒலிம்­பிக் காற்­பந்துப் போட்­டி­க­ளின் காலி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

சவூதி அரே­பிய அணிக்கு எதி­ரான நேற்­றைய ஆட்­டத்­தில் பிரே­சில் 3-1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று, ஏழு புள்­ளி­க­ளு­டன் 'டி' பிரி­வில் முத­லி­டம் பிடித்­தது.

ஜெர்­ம­னிக்கு எதி­ரான ஆட்­டத்­தில் ஹாட்­ரிக் கோல­டித்த பிரே­சில் வீரர் ரிச்­சர்­லி­சன், சவூ­திக்கு எதி­ரான ஆட்­டத்­தி­லும் இரண்டு கோல்­க­ளைப் போட்­டார்.

கடந்த முறை வெள்­ளிப் பதக்­கம் வென்ற ஜெர்­மனி, ஐவரி கோஸ்ட்­டு­டன் மோதிய ஆட்­டத்­தில் 1-1 என்று சமன்­கண்­டது. ஜெர்மனியின் பெஞ்­ச­மின் ஹென்­ரிக்ஸ் சொந்த கோல் போட்­டது, அவ்வணிக்கு எம­னாக அமைந்­தது. மாற்று வீர­ராக வந்த எடு­வர்ட் லோவன் அடித்த கோலால் ஜெர்­மனி தோல்­வி­யி­லி­ருந்து தப்­பி­யது.

இத­னால், ஐந்து புள்ளி­களு­டன் 'டி' பிரிவில் இரண்­டா­மி­டம் பிடித்த ஐவரி கோஸ்ட் காலி­று­திக்­குத் தகு­தி­பெற்­றது.

சவூ­தி­யு­ட­னான ஆட்­டத்­தில் வென்று, பிரே­சி­லி­டம் தோற்­றி­ருந்த ஜெர்­மனி, நான்கு புள்­ளி­களை மட்­டுமே பெற்­ற­தால் மூன்­றா­மி­டம் பிடித்து, பிரி­வுச் சுற்­று­டன் வெளி­யே­றி­யது. தான் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் சவூதி தோல்வியடைந்தது.