மேன்யூவிற்கு வருகிறார் வரான்

1 mins read
ec7426ec-acd4-4130-aa23-d32454b85659
-

லண்­டன்: உல­கின் முன்­ன­ணித் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர்­களில் ஒரு­வ­ரா­கக் கரு­தப்­படும் பிரான்­சின் ரஃபாயல் வரான், 28 (படம்), அடுத்த பரு­வத்­தில் இருந்து மான்­செஸ்­டர் யுனை­டெட் காற்பந்துக் குழு­விற்­காக விளை­யா­ட­வி­ருக்­கி­றார்.

கடந்த 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து ஸ்பெ­யி­னின் ரியால் மட்­ரிட் குழு­விற்­காக விளை­யாடி வரும் வரானை ஒப்­பந்­தம் செய்ய நீண்­ட­கா­ல­மாக மேன்யூ மேற்­கொண்ட முயற்சி ஒரு­வா­றா­கக் கைகூடி இருக்­கிறது.

இதற்­காக எவ்­வ­ளவு தொகை கைமா­றும் என்­பது தெரி­விக்­கப் பட­வில்லை என்­ற­போ­தும் 41 மில்லியன் பவுண்டாக (S$77 மி.) இருக்­க­லாம் என்று 'கோல்.காம்' செய்தி தெரிவிக்கிறது.

இதை­ய­டுத்து, வரான் அடுத்த வாரம் மான்­செஸ்­ட­ருக்கு வந்து மருத்­து­வச் சோத­னை­களில் பங்­கேற்­பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ரியால் மட்ரிட் குழு­விற்­காக 360 போட்டி­களில் ஆடி இருக்கும் வரான், அக்­குழு சார்­பில் நான்கு முறை சாம்­பி­யன்ஸ் லீக் பட்­டம் உட்­பட 18 பட்­டங்­களை வென்று இருக்­கி­றார். அத்­து­டன், 2018ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணம் வென்ற பிரெஞ்சு அணி­யி­லும் இவர் இடம்­பெற்­றி­ருந்­தார்.

முன்­ன­தாக, ஜெர்­ம­னி­யின் டோர்ட்­மண்ட் குழு­வி­ட­மி­ருந்து இங்­கி­லாந்து தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் ஜேடன் சாஞ்­சோவை $136 மி. விலை­கொ­டுத்து மேன்யூ வாங்­கி­யது. பிரிட்­டிஷ் கோல்­காப்­பா­ளர் டாம் ஹீட்­ட­னும் மேன்­யூ­வு­டன் இணைந்­துள்­ளார்.