2016 ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு முதன்முறையாகத் தங்கம் வென்று தந்த ஜோசப் ஸ்கூலிங், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தங்கத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளார்.
இன்றிரவு 6.54 மணிவாக்கில் இடம்பெறும் ஐந்தாவது தகுதிச்சுற்றில் ஸ்கூலிங் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் கேலெப் டிரெஸ்ஸல், ஹங்கேரியின் கிறிஸ்டோஃப் மிலக் ஆகியோர் அவருக்குக் கடும் போட்டியைத் தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரையிறுதிச் சுற்று நாளையும் இறுதிப்போட்டி நாளை மறுநாளும் இடம்பெறும்.