தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக்: அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற தவறினார் ஸ்கூலிங்

1 mins read
2113ccdd-10f1-4402-8fc4-eafdec4d249c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியுள்ளார் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங்.

அவர் தகுதிச் சுற்றில் எட்டாவதாக வந்தார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 53.12 வினாடி. சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதே போட்டியில் சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கத்தை வென்றுதந்தார் ஸ்கூலிங். அது, ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூர் வென்ற

முதல் தங்கப் பதக்கம். தகுதிச் சுற்றுகளில் பங்கேற்கும் 59 போட்டியாளர்களில் ஆகக் குறைவான நேரத்தை எடுக்கும் 16 பேர்தான் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவர்.

இதற்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்து இப்போதைக்குத் திட்டம் ஏதும் இல்லை என்றார் ஸ்கூலிங்.

ஆனால் தனது பயணம் இந்தத் தோல்வியுடன் முடியாமல் பார்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தனது பயிற்சி முறையில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தேவையில்லை என்று நம்புவதாகவும் ஸ்கூலிங் கூறினார்.

100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு சிங்கப்பூரர் குவா செங் வென்னும் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினார்.

குறிப்புச் சொற்கள்