மேசைப்பந்து: வெண்கலப் பதக்கத்தை வெல்லத் தவறினார் சிங்கப்பூரர்

மேசைப்பந்து: வெண்கலப் பதக்கத்தை வெல்லத் தவறினார் சிங்கப்பூரர்

1 mins read
b9b4dcd0-64cb-46fb-981d-775ad7f4d352
சிங்கப்பூரின் யூ மெங்யூ. படம்: ஏஎஃப்பி -

ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மேசைப்பந்துப் போட்டியில் சிங்கப்பூரின் யூ மெங்யூவை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார் ஜப்பானின் மிமா இட்டோ.

6-11, 11-8, 11-7, 11-7, 11-6 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றிகண்டார் இட்டோ.

ஏற்கெனவே கலப்பு இரட்டையர் பிரவில் தங்கம் வென்றிருந்த இட்டோவிற்கு இந்த ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கம் இது.

சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் 15 வயதிலேயே வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறார்.

தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தை வெல்வது சிங்கப்பூரின் யூவிற்குச் சவாலானதாக இருந்தது. பெண்கள் மேசைப்பந்து உலகத் தரவரிசையில் 47வது இடத்தில் இருக்கும் அவர், காயமுற்றிருந்ததாலும் போட்டியில் சிரமப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்