ஜோசஃப் ஸ்கூலிங் தோல்வி

ஜோசஃப் ஸ்கூலிங் தோல்வி

1 mins read
4b8084ad-b05b-459e-9f9b-f1cd0021a527
ஒலிம்பிக் விளையாட்டுகளின் 100 மீட்டர்வண்ணத்துப்பூச்சிபாணி நீச்சல் போட்டியின் தகுதிச் சுற்றில் சிங்கப்பூர் நட்சத்திரம்ஜோசஃப் ஸ்கூலிங். அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினார் ஸ்கூலிங்.படம்: ஏஎஃப்பி -

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியுள்ளார் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங்.

அவர் தகு­திச் சுற்­றில் எட்டாவதாக வந்­தார். அவர் எடுத்துக்­கொண்ட நேரம் 53.12 வினாடி. சென்ற ஒலிம்­பிக் விளையாட்­டு­களில் இதே போட்­டி­யில் சிங்­கப்­பூ­ருக்­குத் தங்­கப் பதக்கத்தை வென்­று­தந்­தார் ஸ்கூ­லிங். அது, ஒலிம்­பிக் வர­லாற்­றில் சிங்­கப்­பூர் வென்ற முதல் தங்­கப் பதக்­கம். தகு­திச் சுற்­று­களில் பங்கேற்­கும் 59 போட்­டி­யா­ளர்­களில் ஆகக் குறை­வான நேரத்தை எடுக்கும் 16 பேர்­தான் அரை­யிறுதிச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­று­வர்.

இதற்­குப் பிறகு என்ன செய்வது என்­பது குறித்து இப்போதைக்­குத் திட்­டம் ஏதும் இல்லை என்­றார் ஸ்கூ­லிங்.

ஆனால் தனது பய­ணம் இந்­தத் தோல்­வியுடன் முடி­யா­மல் பார்த்­துக்­கொள்­ளும் எண்­ணம் கொண்டு உள்ளதாக அவர் குறிப்­பிட்­டார்.

தனது பயிற்சி முறை­யில் பெரிய மாற்­றங்­க­ளைச் செய்­யத் தேவையில்லை என்று நம்­புவதாகவும் ஸ்கூ­லிங் கூறி­னார்.

100 மீட்­டர் வண்­ணத்­துப்­பூச்சி பாணி நீச்­சல் தகு­திச் சுற்­றில் பங்கேற்ற மற்­றொரு சிங்­கப்­பூ­ரர் குவா செங் வென்­னும் அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­றத் தவறினார்.