நட்சத்திரம் கேலப் டிரெசலின் தங்க வேட்டை

நட்சத்திரம் கேலப் டிரெசலின் தங்க வேட்டை

2 mins read

தோக்கியோ: ஆண்கள் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் அமெரிக்காவின் கேலப் டிரெசல்.

போட்டியை 47.02 வினாடியில் முடித்து ஒலிம்பிக் சாதனை படைத்தார் டிரெசல். இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் அவர் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இது. இதற்கு முன் அவர் ஆண்கள் 100 மீட்டர் எதேச்சை பாணி அஞ்சல் நீச்சல் போட்டியிலும் தங்கம் வென்றார்.

இந்த ஒலிம்பிக்கில் டிரெசல் அதிகபட்சமாக மொத்தம் ஏழு தங்கப் பதக்கங்களை வெல்லக்கூடும். போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் ஆஸ்திரேலியாவின் ஷேல்மர்ஸ் கைல். வெண்கலப் பதக்கம் ரஷ்ய ஒலிம்பிக் குழுமத்தின் கொலெஷ்னிக்கொவ் க்லிமென்ட்டுக்குச் சென்றது.

ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் முதன்­மு­றை­யாக நடை­பெற்ற 800 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­சல் போட்­டி­யில் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மாறாக தங்­கத்­தைக் கைப்பற்றினார் அமெ­ரிக்­கர் பாபி ஃபிங்க. போட்டி­யில் இத்­தா­லி­யின் கிரே­கோ­ரியோ பால்ட்­ரி­னி­யோ­ரி­தான் வெல்­வார் எனப் பர­வ­லாக எதிர்பார்க்கப்பட்டது.

போட்­டி­யின் முதல் 750 மீட்­டர் தூரத்­திற்கு அவர் முன்னி­லை­யி­ல் இருந்­தார். ஆனால் அதற்­குப் பிறகு அபா­ர­மாக நீந்தி தங்­கத்­தைப் பறித்துக்­கொண்­டார் ஃபிங்க.

அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் ஏழு நிமி­டங்­கள் 41.87 வினா­டி­. வெள்­ளிப் பதக்­கத்தை பால்ட்ரினியோரி வென்­றார். வெண்­க­லப் பதக்­கம் உக்­ரே­னின் மிக்­காய்லோ ரொமான்­சுக்­கிற்­குச் சென்­றது. ஆண்­கள் 200 மீட்­டர் நெஞ்சு நீச்­சல் போட்­டி­யில் தங்கத்தைக் கைப்­பற்­றி­னார் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சேக் ஸ்ட்­பல்டி-குக். போட்­டியை முடிக்க ஸ்ட்பல்டி-குக் எடுத்­துக்­கொண்ட இரண்டு நிமி­டங்­கள் 6.38 வினா­டி நேரம் ஓர் ஒலிம்­பிக் சாதனை. வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நெதர்லாந்தைச் சேர்ந்த ஆர்னோ கமிங்கா. வெண்கலப் பதக்கத்தை வென்றவர் ஃபின்லாந்தின் மேட்டி மேட்சன்.

பெண்கள் 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் சீனாவின் சாங் யூஃபெய் தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டியை 2 நிமிடங்கள் 3.86 வினாடியில் முடித்து ஒலிம்பிக் சாதனை படைத்தார் அவர். வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் இரண்டும் அமெரிக்காவிற்குச் சென்றன.

பெண்கள் 200 மீட்டர் எதேச்சை பாணி அஞ்சல் நீச்சல் போட்டியை ஏழு நிமிடங்கள் 40.33 வினாடியில் முடித்து உலகச் சாதனையை முறியடித்து தங்கம் வென்றது சீனா. 21 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தப் போட்டியை அமெரிக்காவோ ஆஸ்திரேலியாவோ வெல்லவில்லை.