ஹாக்கி காலிறுதியில் இந்தியா

ஹாக்கி காலிறுதியில் இந்தியா

1 mins read
b13858bb-3976-4692-9183-e21cac8baf89
ஏபிரிவு ஆட்டத்தில்கோல் அடித்த பிறகு கொண்டாடும் இந்திய ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங். படம்: ராய்ட்­டர்ஸ் -

தோக்­கியோ: ஒலிம்­பிக் விளையாட்டு­க­ளின் ஆண்­கள் ஹாக்கி போட்­டி­யின் 'ஏ' பிரிவு ஆட்­டத்­தில் ஒலிம்பிக் நடப்பு வெற்­றி­யா­ளர் அணி­யான அர்­ஜென்­டி­னாவை வென்­றுள்­ளது இந்­தியா.

ஆட்டத்தை 3-1 எனும் கோல் கணக்கில் வென்ற இந்தியா போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

ஆட்­டத்­தின் கடைசி இரண்டு நிமி­டங்­களில் இரண்டு கோல்­களை அடித்து அபார வெற்றி கண்­டது இந்­திய அணி.

முதல் இரண்டு காலாட்டங்களில் கோல்கள் விழவில்லை.

43வது நிமிடத்தில் வருண் குமார் கோலடித்து இந்தியாவை முன்னுக்கு அனுப்பினார்.

48வது நிமிடத்தில் அர்ஜென்டினா ஆட்டத்தை சமநிலை படுத்தியது. அதற்குப் பிறகு 58வது நிமிடத்தில் விவேக் சாகர் பிரசாத்தும், 59வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங்கும் இந்தியாவிற்கு மேலும் இரண்டு கோல்களை அடித்தனர்.

இந்தியா, அதன் கடைசி 'ஏ' பிரிவு ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் ஜப்பானைச் சந்திக்கும்.

'ஏ' பிரிவு ஆட்­டத்­தில் ஆஸ்திரேலியா­வி­டம் 7-1 எனும் கோல் கணக்­கில் படு­தோல்வி கண்ட இந்­தியா நன்கு மீண்டு வந்துள்­ளது. 41 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக ஆண்­கள் ஹாக்­கிப் போட்­டி­யில் ஒலிம்­பிக் தங்­கம் வெல்­லும் இலக்­கைக் கொண்­டுள்­ளது, தன்னம்­பிக்­கை­யு­டன் விளை­யா­டி­வ­ரும் இந்­திய அணி.

'ஏ' பிரி­வில் இது­வரை ஆஸ்திரேலியா­விற்கு எதி­ரான ஆட்­டத்­தைத் தவிர அனைத்து ஆட்டங்­க­ளை­யும் வென்­றுள்­ளது இந்­தியா.