தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார் இந்திய வீரர் சதீஷ் குமார். அவர் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை 4-1 எனும் புள்ளிக்கணக்கில் வென்றார்.
ஒலிம்பிக்கில் சூப்பர்ஹெவிவெய்ட் எனப்படும் பெரும் உயர் எடை குத்துச்சண்டை பிரிவில் முதன்முறையாகப் பங்கேற்கும் இந்திய வீரர் 32 வயது சதீஷ்.
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இரண்டு முறை வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
தேசிய அளவிலும் பல விருதுகளை வென்றிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சதீஷ், ஓர் இராணுவ வீரரும்கூட.

