மேசைப்பந்து: ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கம்

மேசைப்பந்து: ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கம்

1 mins read

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மேசைப்பந்துப் போட்டியில் சிங்கப்பூரின் யூ மெங்யூவை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார் ஜப்பானின் மிமா இட்டோ.

6-1, 11-8, 11-7, 11-7, 11-6 எனும் ஆட்­டக்­க­ணக்­கில் வெற்றி­கண்­டார் இட்டோ.

ஏற்­கெ­னவே கலப்பு இரட்டையர் பிர­வில் தங்­கம் வென்­றி­ருந்த இட்டோ­விற்கு இந்த ஒலிம்­பிக்­கில் இரண்­டா­வது பதக்கம் இது.

சென்ற ஒலிம்­பிக் விளை­யாட்டு­களில் 15 வய­தி­லேயே வெண்கலப் பதக்­கத்­தை­யும் வென்­றார்.

உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தை வகிக்கிறார்.

தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தை வெல்வது சிங்கப்பூரின் யூவிற்குச் சவாலானதாக இருந்தது. பெண்கள் மேசைப்பந்து உலகத் தரவரிசையில் 47வது இடத்தில் இருக்கும் அவர், காயமுற்றிருந்ததாலும் போட்டியில் சிரமப்பட்டார்.