நெஞ்சு நீச்சலில் உலக சாதனை

நெஞ்சு நீச்சலில் உலக சாதனை

1 mins read
0db20591-bd99-4cb0-853a-5f722e7228cb
நெஞ்சு நீச்சலில் தங்கம் வென்ற தென்னாப் பிரிக்காவின் தட்ஜனா. படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ஜப்­பா­னிய தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் நடந்துவரும் ஒலிம்­பிக் போட்­டி­களில் நேற்று 200 மீட்­டர் நெஞ்சு நீச்­ச­லில் புதிய உலக சாதனை படைக்­கப்­பட்­டது.

தென்­னாப்­பி­ரிக்­க வீராங்­கனை தட்­ஜனா ஸ்கூம்­மேக்­கர், 2 நிமி­டம் 18.95 வினா­டி­யில் அந்தத் தொலைவை நீந்தி இது­வரை இல்­லாத உலக சாத­னை­யைப் படைத்­தார். அதன் மூலம் தென்­னாப்­பி­ரிக்காவுக்கு முதல் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

இந்த 24 வயது வீராங்­கனை ஏற்­கெ­னவே செவ்­வாய்க்­கி­ழமை 100 மீட்­டர் நெஞ்சு நீச்­ச­லில் வெள்­ளிப் பதக்­கத்­தைத் தட்­டிச்சென்­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தத் தொலைவை அவர் 0.97 வினா­டி­களில் நீந்­தி­னார்.

இந்­த தென்­னாப்­பி­ரிக்க மாதின் வெற்­றி­யை­யும் சேர்த்து ஆப்­பி­ரிக்­கா­வுக்கு இரண்டு தங்­கப் பதக்­கங்­கள் கிடைத்­துள்­ளன.

துனீ­சி­யா­வின் அகம்­மது ஹாஃப்னாவ் என்ற ஆட­வர் 400 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­சல் போட்­டியில் ஞாயிற்­றுக்­கி­ழமை தங்­கப் பதக்கம் வென்­றார்.

அதே­வே­ளை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் எம்மா மெக்­கி­யோன் 100 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­ச­லில் தங்­கம் வென்­றார். இது ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குக் கிடைத்த ஆறா­வது தங்­கப்­­ பதக்­க­ம்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த 20 வயது நீச்­சல் வீராங்­கனை அரி யார்ன், 400 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­ச­லில், ஐந்து முறை ஒலிம்­பிக்­கில் தங்­கப் பதக்­கம் வென்ற அமெ­ரிக்க வீராங்­க­னையை வீழ்த்தி ஏற்­கெ­னவே தங்­கப்­ ப­தக்­கம் வென்று உள்­ளார்.