டென்னிஸ்: ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி

டென்னிஸ்: ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி

1 mins read
54073407-4366-4309-a706-9c358961641f
-

தோக்­கியோ: தோக்­கி­யோ­வில் நடந்து வரும் 32வது ஒலிம்­பிக் போட்­டி­யில் நேற்று நடந்த ஆடவர் ஒற்­றை­யர் டென்­னிஸ் அரை­யி­றுதி ஆட்­டத்­தில், உலகின் முன்­னணி வீர­ரும் செர்­பி­யாவை சேர்ந்­த­வ­ரு­மான ஜோக்கோ­விச், ஜெர்­ம­னி­யின் அலெக்­சாண்­டர் வெரவை எதிர்த்தார். பர­ப­ரப்­பாக நடந்த இந்த ஆட்­டத்­தில், ஜோக்கோ­விச் அதிர்ச்சி தோல்வி அடைந்­தார்.

ஜோகோ­விச்சை எதிர்த்து விளை­யா­டிய அலெக்­சாண்­டர் வெரவ் 1-6, 6-3, 6-1 செட்­களில் வெற்றி பெற்று இறுதி போட்­டிக்கு முன்­னே­றி­னார்.

விம்­பிள்­டன் டென்­னிஸ் தொட­ரில் சாம்­பி­யன் பட்­டம் வென்று அசத்­திய ஜோக்கோ­விச், ஒலிம்­பிக் தொட­ரில் அரை­யி­று­தி­யு­டன் வெளி­யே­றி­விட்­டார்.