கிரிக்கெட்: இந்தியாவை இலங்கை வென்றது

கிரிக்கெட்: இந்தியாவை இலங்கை வென்றது

2 mins read

கொழும்பு: இந்­தியா-இலங்கை அணி­கள் இடை­யி­லான 3வது மற்­றும் கடைசி 20 ஓவர் கிரிக்­கெட் போட்டி கொழும்பு பிரே­ம­தாசா அரங்கில் வியா­ழன் இரவு நடந்­தது. அதில் இந்­தி­யாவை 81 ஓட்­டங்­களில் சுருட்டி தொடரை இலங்கை வென்­றது.

பூவா, தலையா போட்­ட­தில் வென்ற இந்­திய அணித் தலைவர் தவான் முத­லில் பந்­த­டிக்க முடிவு செய்­தார். போதிய அனு­ப­வம் இல்­லாத இந்­திய வீரர்­கள், அந்த ஆடு ­க­ளத்­தில் இலங்­கை­யின் சுழல் தாக்­கு­த­லைச் சமா­ளிக்க முடி­யாமல் திண்­டா­டி­னர்.

முதல் ஓவ­ரி­லேயே தலை­வர் தவான் வீழ்ந்­தார். 36 ஓட்­டங்­களுக்­குள் 5 விக்­கெட்­டு­களை இழந்து இந்­திய அணி ஊச­லா­டி­யது. 20 ஓவர் முடி­வில் இந்­திய அணி 8 விக்­கெட்­டுக்கு 81 ஓட்­டங்­களில் முடங்­கி­யது. அனைத்­து­லக 20 ஓவர் கிரிக்­கெட்­டில் இந்­திய அணி­யின் 3வது குறைந்­த­பட்ச அளவு இது­வா­கும்.

இலங்கை சுழற்­பந்து வீச்­சா­ளர் ஹச­ரங்­கா, தனது 24வது பிறந்த நாளான வியா­ழக்­கி­ழமை, 4 ஓவர்­களில் வெறும் 9 ஓட்­டங்­கள் மட்டும் விட்­டுக்­கொ­டுத்து நான்கு விக்­கெட்­டு­களை சாய்த்­தார்.

பின்­னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 14.3 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்கு 82 ஓட்­டங்­கள் எடுத்து 7 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றது.

இந்த வெற்­றி­யின் மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்­கில் கைப்­பற்­றி­யது. முதல் ஆட்­டத்­தில் இந்­தி­யா­வும், 2வது ஆட்­டத்­தில் இலங்­கை­யும் வெற்றி பெற்­றி­ருந்­தன.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான 20 ஓவர் தொடரை இலங்கை வென்­றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.