தோக்கியோ: திடல்தட ரசிகர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஒலிம்பிக் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று, அதிவேக வீரராக உருவெடுத்துள்ளார் இத்தாலியின் லேமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ். நேற்று இரவு நடந்த இறுதிச் சுற்றில் ஜேக்கப்ஸ் 9.8 வினாடிகளில் முதலாவதாக பந்தயத்தை முடித்தார். 9.84 வினாடிகளில் வந்த அமெரிக்காவின் ஃபிரெட் கெர்லி வெள்ளிப் பதக்கத்தையும் கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸே (9.89 வினாடி) வெண்கலத்தையும் வென்றனர். அவசரப்பட்டு ஓடத் தொடங்கியதால் பிரிட்டனின் ஸர்னல் ஹியூஸ் இறுதிப் பந்தயத்திலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் டிரேவான் புரோமல் இறுதிச் சுற்றுக்கே தகுதிபெறவில்லை.
100 மீட்டர் ஓட்டம்: இத்தாலிய வீரர் மின்னல் வேகம்
1 mins read

