வரலாறு படைத்த இந்தியா

1 mins read
fa85aef8-7cdf-48c1-b7f0-e5c9e784305a
வெற்றியைக் கொண்டாடும் இந்திய அணி. படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ஒலிம்­பிக் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக பெண்­கள் ஹாக்கி போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது இந்­தியா.

காலி­று­தி­யாட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யாவை 1-0 எனும் கோல் கணக்­கில் இந்­தியா வெற்­றி­கண்­டது. 22வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கி இந்தியாவை அரையிறுதிச் சுற்றுக்கு அனுப்பினார் குர்ஜித் கோர்.

ஆட்­டத்­தின் கடைசி கால் மணிநேரத்தில் இந்­திய கோல்­காப்பாளர் சவிதா அபா­ர­மாக ஆடி ஆஸ்­தி­ரே­லி­யாவை கோல­டிக்க விடா­மல் தடுத்­தார்.

பெண்­கள் ஹாக்­கி­ அரையிறுதியாட்டங்கள் நாளை நடை­பெறும்.

ஆண்­கள் ஹாக்­கி­யி­லும் இந்திய அணி அரை­யி­று­திச் சுற்­றுக்கு முன்னே­றி­யது.

நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் பிரிட்டனை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது இந்தியா. கடை­சி­யாக 41 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்­தியா ஒலிம்­பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்­கி­ போட்டியில் அரை­யி­று­திச் சுற்­றுக்­குச் சென்­றது. அப்­போது தங்­கம் வென்றது இந்­தியா.