முப்பதாமிடத்தில் வந்த சிங்கப்பூரர்
முக்குளிப்புப் போட்டியில் சிங்கப்பூரில் இருந்து முதன்முறையாகப் பங்கேற்றவர் என்ற பெருமைக்குரிய ஃபிரீடா லிம், 23, 'பத்து மீட்டர் ஃபிளாட்பார்ம்' தகுதிச் சுற்றில் முப்பதாம் இடத்தைப் பிடித்தார். ஐந்து முயற்சிகளுக்குப் பின் 215.9 புள்ளிகளைப் பெற்றார் 23 வயதான லிம். அவர் முதல் 18 இடங்களுக்குள் வர முடியாததால் அரையிறுதி வாய்ப்பு கைகூடவில்லை.
இந்தியாவிற்கு 3வது பதக்கம்
இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், 23, வெண்கலம் வென்றார். இது, இந்தியாவிற்குக் கிடைத்த 3வது பதக்கம். வெல்டர் வெய்ட் (65-69 கிலோ) பிரிவு அரை இறுதியில், உலக வெற்றியாளரான துருக்கியின் பியூஸ்னஸ் சர்மனெலியிடம் 5-0 என்ற கணக்கில் தோற்றுப்போனார் லவ்லினா. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தொலை பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

