ஸ்ரீஜேஷ்: இந்திய ஹாக்கிக்கு கிடைத்துள்ள மறுபிறவி

2 mins read
704c0d2a-9f5e-4f69-ba13-d4e036240996
(மேல்படம்) ஜெர்மனியின் கோல் முயற்சிகளை முறியடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட கோல்காப்பாளர் ஸ்ரீஜேஷ். வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

தோக்கியோ: பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏமாற்றங்களைச் சந்தித்து வந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நேற்று கொண்டாட்டத்தில் மூழ்கியது.

கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் அது பதக்கம் வென்றது.

அரையிறுதியில் பெல்ஜியத்திடம் இந்தியா 5-2 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்ததும் இம்முறையும் வெறுங்கையுடன் நாடு திரும்ப வேண்டிவரும் என அஞ்சப்பட்டது.

ஆனால், மூன்றாவது இடத்தை நிர்ணயிக்க ஜெர்மனிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5-4 எனும் கோல் கணக்கில் இந்தியா வாகை சூடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இந்திய ஹாக்கி அணி அதன் ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை எட்டு பதக்கங்களை வென்றுள்ளது.

இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 1980ஆம் ஆண்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அது தங்கம் வென்றது.

அந்த ஆட்டத்தில் 4-3 எனும் கோல் கணக்கில் ஸ்பெயினை இந்தியா வீழ்த்தியது.

நேற்­றைய ஆட்­டத்­தில் இந்­தியா வெற்றி பெற அதன் கோல்­காப்­பா­ளர் ஸ்ரீீஜேஷ் பரட்டு ரவீந்­தி­ரன் முக்­கிய கார­ண­மாக இருந்­தார்.

கோல் போட ஜெர்­ம­னிக்­குக் கிடைத்த ஏறத்­தாழ ஒன்­பது பொன்­னான வாய்ப்­பு­களை அவர் தடுத்து நிறுத்­தி­னார். ஆட்­டம் முடிய சில நிமி­டங்­கள் எஞ்­சி­யி­ருந்த நிலை­யில், ஜெர்­மனி தனது கோல் வேட்­டை­யைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யது.

ஆனால் கொஞ்­சம்­கூட அச­ரா­மல் நின்ற ஸ்ரீஜேஷ் ஜெர்­மன் வீரர்­

க­ளின் முயற்­சி­களை முறி­ய­டித்­தார்.

"இது இந்­திய ஹாக்­கிக்­குக் கிடைத்­துள்ள மறு­பி­றவி. 1980ல் தங்­கப் பதக்­கம் வென்­ற­தோடு சரி. அதை­ய­டுத்து, ஒலிம்­பிக்­கில் பதக்­கம் கிடைக்­கவே இல்லை. இன்று பதக்­கம் வென்­று­விட்­டோம். இது இந்­திய ஹாக்­கிக்குப் புத்­து­ணர்ச்சி­ யைத் தந்­துள்­ளது.

இனி அதி­க­மான இந்­திய இளை­யர்­கள் ஹாக்கி விளை­யா­டு­வார்­கள். ஆட்­டத்­தின் கடை­சிக்

கட்­டத்­தில் ஜெர்­ம­னிக்­குப் பல பெனால்டி கார்­னர்­கள் கிடைத்­தன. இந்­தியா எப்­ப­டி­யா­வது ஒலிம்­பிக் போட்­டி­யில் பதக்­கம் வெல்ல வேண்­டும் என்­பது எனது 21 ஆண்­டுக் கனவு. அதற்­காக நான் கடு­மை­யாக உழைத்­துள்­ளேன்.

"இதை மன­தில் கொண்டு ஜெர்­மனி வீரர்­கள் என்னை நோக்­கிப் பறக்­க­விட்ட அனைத்­துப் பந்­து­களை­யும் தடுத்து நிறுத்­தி­னேன்," என்று ஸ்ரீஜேஷ் பெரு­மி­தத்­து­டன் தெரி­வித்­தார். இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பெனால்டி ஷுட் அவுட்டில் 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் முதல்முறையாக தங்கம் வென்றது.