தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதனை புரிந்த கென்ய வீரர்

1 mins read

சப்­போரோ: ஒலிம்­பிக் விளையாட்டு­க­ளின் ஆண்­கள் நெடுந்­தொ­லை­வோட்­டப் போட்டி­யில் தங்­கம் வென்­றுள்­ளார் கென்­யா­வின் எலி­யுட் கிப்சொகே. சென்ற ஒலிம்­பிக் விளையாட்டு­களி­லும் இந்­தப் போட்­டி­யில் தங்­கம் வென்­றார் இவர். அடுத்­த­டுத்த ஒலிம்­பிக் விளை­யாட்டு­களில் ஆண்­கள் நெடுந்­தொ­லை­வோட்­டப் போட்டி­யில் தங்­கம் வென்­றுள்ள மூன்றே வீரர்­களில் கிப்சொகே இடம்­பெற்­றுள்­ளார்.

போட்­டியை இரண்டு மணி­நே­ரம் எட்டு நிமி­டம் 38 வினா­டி­யில் முடித்­தார் கிப்­சொகே. நெடுந்­தொ­லை­வோட்ட வர­லாற்­றில் ஆகச் சிறந்த வீரர்­களில் ஒரு­வ­ராக கிப்­சொகே திகழ்­கிறார். போட்­டி­யில் நெதர்­லாந்­தின் அப்டி நகீயெ வெள்­ளிப் பதக்­கத்தை வென்­றார். வெண்­க­லம் பெல்­ஜி­யத்­தின் பஷீர் அப்­டிக்­குச் சென்­றது.

ஒரு நிமி­டம் 20 வினாடி வித்­தி­யா­சத்­தில் கிப்­சொகே போட்டியை வென்­றார். 49 ஆண்டு­களில் ஒலிம்­பிக்­கில் இவ்­வ­ளவு சிறப்­பா­கப் போட்­டியை வென்­றுள்ள வீரர் இவரே.