தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் தொடர்ந்து ஏழாவது முறையாக தங்கம் வென்றுள்ளது அமெரிக்கா. இறுதியாட்டத்தில் ஜப்பானை 90-75 எனும் புள்ளிக்கணக்கில் அமெரிக்கா வென்றது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாகப் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வெல்லும் நிலைக்கு முன்னேறிய ஜப்பான், வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

