பதக்கம் பறிபோகும் நிலை

பதக்கம் பறிபோகும் நிலை

1 mins read
d767285d-09d8-466a-9c55-ec454a56e707
விளையாட்டு வீரர் சிஜே உஜாவுக்கு (இடக்கோடி) எதிரான புகார் மெய்ப்பிக்கப்பட்டால் இந்த பிரிட்டிஷ் குழு, தான் வென்ற வெள்ளி பதக்கத்தை இழந்துவிடும். படம்: ராய்ட்டர்ஸ் -

பாரிஸ்: தோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரிட்டனைச் சேர்ந்த சிஜெ உஜா, ஊக்க மருந்து தொடர்பான விதிமீறலில் ஈடுபட்டார் என்று கூறப்படுவதன் தொடர்பில் தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்கள் நேர்மை பிரிவு என்ற அமைப்பு இதனை தெரிவித்தது.

அவருக்கு எதிரான புகார் மெய்ப்பிக்கப்படுமானால் 27 வயதாகும் உஜாவிடம் இருந்தும் அவர் பிரதிநிதித்த பிரிட்டிஷ் குழுவிடம் இருந்தும் பதக்கம் பறிக்கப்படும்.