தோக்கியோ: தோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 5ஆம் தேதிவரை நடக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த தங்க வேலு மாரியப்பன் என்ற உயரம் தாண்டும் வீரர் உட்பட, 54 வீரர் களைக் கொண்ட இந்திய அணி ஜப்பானுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றதாக அதிகார்பூர்வ தகவல்கள் கூறின.

