பெலேவை விஞ்சிய மெஸ்ஸி

பியூ­னஸ் அய்­ரஸ்: அனைத்­து­ல­கப் போட்­டி­களில் ஆக அதிக கோல்­களை அடித்த தென்­ன­மெ­ரிக்க வீரர் என்ற பெரு­மையை பிரே­சில் முன்­னாள் நட்­சத்­தி­ரம் பெலே­வி­டம் இருந்து தட்­டிப் பறித்­துக்­கொண்­டார் அர்­ஜெண்­டினா அணித்­த­லை­வர் லய­னல் மெஸ்ஸி.

பொலி­வி­யா­விற்கு எதி­ராக நேற்று நடந்த உல­கக் கிண்­ணத் தகு­திச்­சுற்று ஆட்­டத்­தில் மெஸ்ஸி மூன்று கோல்­க­ளைப் போட்டு ‘ஹாட்­ரிக்’ சாதனை நிகழ்த்த, அர்­ஜெண்­டினா 3-0 என்ற கணக்­கில் வெற்றி­பெற்­றது.

இது­வரை 153 அனைத்­து­ல­கப் போட்­டி­களில் விளை­யாடி இருக்­கும் மெஸ்ஸி, 79 கோல்­களை அடித்­துள்­ளார்.

பெலே 92 ஆட்டங்களில் 77 கோல்­களைப் போட்­டுள்­ளார்.

“இந்­தத் தரு­ணத்­திற்­காக வெகு­நாள்­க­ளா­கக் காத்­தி­ருந்­தேன். இப்­படியொரு நாள் வரும் என்று கன­வும் கண்­டேன்,” என்று நெகிழ்ச்சி­யு­டன் சொன்­னார் மெஸ்ஸி.

கொவிட்-19 தொற்று பர­வத் தொடங்­கிய பிறகு, நேற்­றைக்­குத்­தான் தங்­க­ளது தேசிய அணி பங்கேற்ற ஆட்­டத்தை நேரில் காண அர்­ஜெண்­டினா ரசி­கர்­கள் முதன்­மு­த­லாக அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இந்த மகிழ்ச்­சி­யான வேளை­யில், அண்­மை­யில் வென்ற ‘அமெ­ரிக்­கக் கிண்­ணத்தை’ 21,000 ரசி­கர்­கள் முன்­பாக உயர்த்­திக் காட்டி, அர்­ஜெண்­டினா வீரர்­கள் கொண்­டா­டி­னர். இவ்­வாண்டு ஜூலை­யில் நடந்த அத்­தொ­ட­ரின் இறு­திப் போட்­டி­யில் அர்­ஜெண்­டினா 1-0 என்ற கோல் கணக்­கில் பிரே­சி­லைத் தோற்­கடித்­தது.

“அந்த வெற்­றி­யைக் கொண்­டாட இதை­வி­டச் சிறப்­பான வழி இருக்க முடி­யாது. என் தாயார் இங்­குள்­ளார். என் உடன்­பி­றந்­த­வர்­கள் பார்­வை­யா­ளர் பகு­தி­யில் உள்­ள­னர். எங்­க­ளின் வெற்­றி­யைக் கொண்­டாட அவர்­கள் எல்­லா­ரும் இங்கு வந்­துள்­ள­னர். மிக்க மகிழ்ச்சி­யாக இருக்­கிறது,” என்­றார் மெஸ்ஸி.

இத­னி­டையே, நேற்று நடந்த இன்­னோர் ஆட்­டத்­தில் நட்­சத்­திர வீரர் நெய்­மார் தன் பங்­கிற்கு ஒரு கோல­டிக்க, பிரே­சில் 2-1 என்ற கணக்­கில் பெருவை வீழ்த்­தி­யது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!