இந்தியா-இங்கிலாந்து: ஐந்தாவது டெஸ்ட் ரத்து

மான்­செஸ்­டர்: கொவிட்-19 கிருமி மேலும் பல­ரைத் தொற்றி­வி­ட­லாம் என்ற அச்­சம் கார­ண­மாக இந்­தியா-இங்­கி­லாந்து கிரிக்­கெட் அணி­க­ளுக்கு இடையே மான்செஸ்டரில் நேற்று தொடங்­க­ இருந்த 5வது, கடைசி டெஸ்ட் போட்டி கைவிடப்­பட்டது.

நான்­கா­வது போட்­டி­யின்­போது இந்­திய அணி­யின் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் ரவி சாஸ்­தி­ரிக்­குக் கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத­னால், பந்­து­வீச்­சுப் பயிற்­று­விப்­பா­ளர் பரத் அருண், களக்­காப்புப் பயிற்­று­நர் ஸ்ரீதர், இயன் சிகிச்சை நிபு­ணர் நித்­தின் பட்­டேல் ஆகி­யோர் தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக்­கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று.

இந்­நி­லை­யில், துணை இயன் சிகிச்சை நிபு­ணர் யோகேஷ் பார்­ம­ருக்­குக் கடந்த புத­னன்று கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து, ஐந்­தா­வது போட்­டிக்­கான அணி­யைக் கள­மி­றக்க முடி­யாத நிலை இந்­தி­யா­விற்கு ஏற்­பட்­ட­தாக இங்­கி­லாந்து, வேல்ஸ் கிரிக்­கெட் வாரிய அறிக்கை தெரி­வித்­தது.

நான்கு போட்­டி­கள் முடி­வில் இந்­திய அணி 2-1 என முன்­னிலை பெற்­றி­ருந்­தது. இத­னி­டையே, ஐந்­தா­வது போட்­டி­யில் விளை­யாட இந்­திய வீரர்­கள் தயங்­கி­ய­தாக் கூறப்­ப­டு­கிறது. இத­னை­ய­டுத்து, அவர்­க­ளின் பாது­காப்பு கருதி, போட்டி கால­வரம்­பின்றி தள்­ளி­வைக்­கப்­ப­டு­வதாக இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரிய வட்­டா­த்தைச் சுட்டி 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!