தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: மகன் கோல் போட்ட ஒரு சில நிமிடங்களில் தந்தையின் உயிர் பிரிந்தது

1 mins read
1bb96100-69b1-4d9c-bfd0-c7f98a7df809
பிரசித்திபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கோல் போட்ட நேத்தன் ஏக். படம்: இபிஏ -

பிரசித்திபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தாம் கோல் போட்ட ஒரு சில நிமிடங்களில் தமது தந்தை காலமானதாக மான்செஸ்டர் சிட்டி குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் நேத்தன் ஏக் கூறியுள்ளார்.

"கடந்த சில வாரங்கள் எனது வாழ்வின் ஆகக் கடினமான தருணங்களாக இருந்தன. எனது தந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனது காதலி, குடும்பம், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து ஆதரவு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்," என்று வியாழக்கிழமை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஏக், 26, பதிவிட்டார்.

அவரது இந்தப் பதிவு காற்பந்து வீரர்கள், ரசிகர்கள் என பலதரப்பினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"கடினமான தருணங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் ஆர்பி லெய்ப்ஸிக் குழுவுக்கு எதிராக எனது முதல் கோலைப் போட்டேன். ஒரு சில நிமிடங்கள் கழித்து எனது தந்தையின் உயிர் பிரிந்தது. அப்போது எனது தாயாரும் எனது சகோதரரும் உடனிருந்தனர்," என்றார் ஏக்.

"எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். நான் விளையாடுவதை அவர் எப்போது மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் பார்ப்பார். நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள். நான் போட்ட கோலை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன், அப்பா," என்று உருக்கமாகப் பதிவிட்டார் ஏக்.

குறிப்புச் சொற்கள்