கத்துக்குட்டியிடம் வீழ்ந்த 13 முறை வெற்றியாளர்

கத்துக்குட்டியிடம் வீழ்ந்த 13 முறை வெற்றியாளர்

2 mins read
63246a73-a7d5-4f86-8546-eaf0a28b6247
ஷெரிஃப் திராஸ்போல் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் பந்தைத் தக்கவைக்கும் முயற்சியில் ரியால் மட்ரிட் குழுவின் ஃபெடரிக்கோ வல்வெர்டே. படம்: ராய்ட்டர்ஸ் -

மட்­ரிட்: ஐரோப்­பிய சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துக் கிண்­ணத்தை ஆக அதி­க­மாக 13 முறை வென்­றுள்­ள­போ­தும், முதல் முறை­யாக அத்­தொ­ட­ருக்­குத் தகுதி பெற்­றுள்ள மால்­டோவா நாட்­டின் ஷெரிஃப் திராஸ்­போல் குழு­வி­டம் 2-1 என்ற கோல் கணக்­கில் தோற்று அதிர்ச்­சி­ய­ளித்­தது ஸ்பெ­யி­னின் ரியால் மட்­ரிட் குழு.

ஆட்­டம் தொடங்கி 25வது நிமி­டத்­தில் தலை­யால் முட்டி கோல் அ­டித்து ஷெரிஃப் குழு­விற்கு முன்­னிலை பெற்­றுத் தந்­தார் உஸ்­பெ­கிஸ்­தான் வீரர் யக்­‌ஷி­போ­யெவ்.

இந்த 'டி' பிரிவு ஆட்­டத்­தின் இரு பாதி­க­ளி­லும் ரியால் குழுவே ஆதிக்­கம் செலுத்­தி­ய­போ­தும் பதில் கோல­டித்து, ஆட்­டத்­தைச் சம­னுக்­குக் கொண்­டு­வர அதற்கு ஒரு பெனால்டி வாய்பு தேவைப்­பட்­டது.

அந்த வாய்ப்­பைத் தவ­ற­வி­டா­மல் கோல் போட்­டார் ரியால் குழு­வின் பிரெஞ்சு ஆட்­டக்­கா­ரர் கரிம் பென்­சிமா.

அதன்­பின் ரியால் குழு முன்­னி­லைக்­குச் செல்ல அரு­மை­யா­ன­தொரு கோல் வாய்ப்பு கிட்­டி­யும் அத­னைக் கோட்­டை­விட்­டார் மாற்று வீர­ராக வந்த லூக்கா யோவிச்.

ஆனால், யாரும் எதிர்­பா­ராத வித­மாக ஆட்­டத்தின் 89வது நிமி­டத்­தில் அற்­பு­த­மாக கோல­டித்து, ஷெரிஃப் குழு­விற்கு நம்ப முடி­யா­த­தொரு வெற்­றி­யைத் தேடித் தந்­தார் செபாஸ்­டி­யன் தில்.

இந்த ஆட்­டத்­தில் ரியால் குழு­வி­னர் மொத்­தம் 30 முறை எதி­ர் அ­ணி­யின் வலையை நோக்­கிப் பந்தை உதைத்­த­போ­தும் அவர்­களின் கோல் முயற்சிகள் ஈடே­ற­வில்லை. அத்­து­டன், அவர்­க­ளுக்கு 13 கார்­னர் வாய்ப்­பு­களும் கிடைத்­தன.

போர்ட்டோ குழுவைப் போட்டுத் தள்ளிய லிவர்பூல்

இதனிடையே, போர்ச்­சு­க­லின் போர்ட்டோ குழு­விற்கு எதி­ராக நேற்று அதி­காலை நடந்த 'பி' பிரிவு ஆட்­டத்­தில் லிவர்­பூல் குழு 5-1 என்ற கோல் கணக்­கில் வாகை சூடி­யது. லிவர்­பூல் சார்­பில் முகம்­மது சாலா, ஃபிர்மினோ ஆகி­யோர் ஆளுக்கு இரண்டு கோல்­க­ளை­யும் சாடியோ மனே ஒரு கோலை­யும் போட்­ட­னர்.

'பி' பிரி­வில் நடந்த மற்­றோர் ஆட்­டத்­தில், கடைசி நேரத்­தில் பெனால்டி மூலம் லூவிஸ் சுவா­ரெஸ் கோல­டிக்க, அட்­லெட்­டிகோ மட்­ரிட் 2-1 என்ற கோல் கணக்­கில் ஏசி மிலான் குழு­வை மண் கவ்வச் செய்தது.