வெற்றிக் கனியை பறித்த ரொனால்டோ

வெற்றிக் கனியை பறித்த ரொனால்டோ

2 mins read
7f25f68e-c898-4e6c-ae81-1ee464ed2f3f
ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் வெற்றி கோலைப் போட்டு, அளவில்லா மகிழ்ச்சியைத் தமது சக ஆட்டக்காரர் களுடன் கொண்டாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ (நடுவில்).படம்: ராய்ட்டர்ஸ் -

மான்­செஸ்­டர்: காற்­பந்து ஆட்­டத்தை நடு­வர் முடித்­து­வைப்­ப­தற்கு முன்பு என்ன வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம் என்­ப­தற்கு நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்து ஆட்­டம் ஓர்

எடுத்­துக்­காட்டு.

சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யின் முதல் சுற்று ஆட்­டத்­தில் வில்­லா­ரி­யால் குழுவை 2-1 எனும் கோல் கணக்­கில் மான்­செஸ்­டர் யுனை­டெட் வீழ்த்­தி­யது.

ஆனால் இறு­தி­வரை இலட்­சி­யத் தீ அணை­யா­மல் போரா­டி­ய­தால் மட்­டுமே யுனை­டெட்­டால் வாகை சூட முடிந்­தது.

ஆட்­டம் முடிய சில வினா­டி­கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருந்­த­போது

நட்­சத்­திர வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ போட்ட கோல் யுனை­டெட்­டுக்கு வெற்­றி­யைப் பெற்­றுத் தந்­தது.

வெற்றி கோல் போட்­டது மட்­டு­மல்­லாது, சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் ஆக அதிக ஆட்­டங்­களில் கள­மி­றங்­கிய ஆட்­டக்­கா­ரர் என்ற சாதனையையும் ரொனால்டோ நேற்று முன்­தி­னம் படைத்­தார்.

முற்­பாதி ஆட்­டத்­தில் இரண்டு குழுக்­களும் எவ்­வ­ளவு முயன்­றும் கோல் போட முடி­ய­வில்லை. இடை­வே­ளை­யின்­போது ஆட்­டம் கோல் ஏது­மின்றி சம­நி­லை­யில் இருந்­தது.

இந்­நி­லை­யில், ஆட்­டத்­தின் 53வது நிமி­டத்­தில் வில்­லா­ரி­யால் குழு கோல் போட்டு ஓல்ட் டிரா­ஃபர்ட் விளை­யாட்­ட­ரங்­கத்­தில் கூடி­இருந்த யுனை­டெட் ரசி­கர்­களை அதிர்ச்­சி­யில் உறை­ய­வைத்­தது.

இந்த எதிர்­பா­ராப் பின்­ன­டைவு ஏற்­பட்­டும் துவண்­டு­வி­டா­மல் போரா­டிய யுனை­டெட், அடுத்த ஆறு நிமி­டங்­க­ளி­­லேயே கோல் போட்டு ஆட்­டத்தை சமன் செய்­தது.

பெனால்டி எல்­லைக்கு வெளி­யி­லி­ருந்து தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் அலெக்ஸ் டெல்­லேஸ் அனுப்­பிய பந்து வில்­லா­ரி­யால் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர்­கள், கோல்­காப்­பா­ளர் ஆகிய அனை­வ­ரை­யும் கடந்து சென்று பார்ப்­ப­வர் வியக்­கும்

வண்­ணம் வலை­யைத் தீண்­டி­யது.

இதற்கு முன்பு கள­மி­றங்­கிய நான்கு ஆட்­டங்­களில் மூன்று ஆட்­டங்­களை யுனை­டெட் கோட்­டை­விட்­டது. எனவே, வில்­லா­ரி­யா­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் எப்­ப­டி­யா­வது மீண்­டும் வெற்­றியைச் சுவைக்க வேண்­டும் என்ற முனைப்­பு­டன் விளை­யா­டிய யுனை­டெட் தாக்கு

தலைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யது.

மறு­மு­னை­யில், நாங்­கள் எவ்­

வ­கை­யி­லும் சளைத்­த­வர்­கள் அல்ல எனப் போர்க் கொடி உயர்த்­திய வில்­லா­ரி­யால், கோல் வேட்­டை­யில் இறங்­கி­யது.

யுனை­டெட்­டின் கோல்­காப்­பா­ளர் டேவிட் டி ஹய­வும் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர்­களும் விழிப்­பு­டன்

இருந்­தி­ருக்­கா­விட்­டால் வில்­லா­ரி­யால் நிச்­ச­யம் கோல் போட்­டி­ருக்­கும்.

அந்த வகை­யில் அது அரு­மை­யாக விளை­யா­டி­யது. ஆனால் அதன் கோல் முயற்­சி­களை யுனை­டெட்­டின் தற்­காப்பு அரண் மிகச் சிறப்­பான முறை­யில் தடுத்து நிறுத்தி முறி­ய­டித்­தது.

இரு குழுக்­க­ளுக்­கும் தரப்­புக்கு ஒரு புள்­ளி­தான் கிடைக்­கும் என்று பர­வ­லாக நம்­பப்­பட்­ட­போது, மூன்று புள்­ளி­கள்­தான் வேண்­டும் என்று அடித்­துக்­கூ­றும் வகை­யில் யுனை­டெட்­டின் கடை­சிக்­கட்ட தாக்­கு­தல் அமைந்­தது. கோல் பசி­யு­டன் ஆவ­லு­டன் காத்­தி­ருந்த ரொனால்­டோ­வி­டம் பந்து செல்ல, கிடைத்த வாய்ப்பை அவர் நழு­வ­வி­ட­வில்லை.

அவர் அனுப்­பிய பந்து வலைக்­குள் சென்­றதை அடுத்து, ஓல்ட் டிராஃபர்ட் விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நீண்­ட­நாள் கேட்­காத கொண்­டாட்ட ஒலி மீண்­டும் அவ்விடத்தை அதிரவைத்தது. இனி வெற்றிப் பயணம் தொடரும் என்ற நம்பிக்கை அக்குழுவின் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.