நடை கட்டிய நடப்பு வெற்றியாளர்

டுரின்: கடந்த பரு­வத்­தைப் போலவே இப்­ப­ரு­வத்­தி­லும் சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்துப் போட்டியின் கிண்­ணத்­தைக் கைப்­பற்ற நடப்பு வெற்­றி­யா­ள­ரான செல்சி கொண்­டுள்ள இலக்கு ஆட்­டங்­கண்­டுள்­ளது. இதற்கு இத்­தா­லி­யின் யுவெண்­டஸ் குழு­வின் அதி­ரடி ஆட்­டமே கார­ணம்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் 1-0 எனும் கோல் கணக்­கில் செல்­சியை யுவெண்­டஸ் தோற்­க­டித்­தது.

பிற்­பாதி ஆட்­டம் தொடங்­கிய பத்து வினா­டி­களில் ஆட்­டத்­தின் ஒரே கோலை யுவெண்­டஸ் ஆட்­டக்­கா­ரர் ஃபெடரிக்கோ கியேசா போட்­டார்.

இத்­தா­லிய லீக்­கில் ஏமாற்­றம் தரும் வகை­யில் விளை­யாடி வரும் யுவெண்­டஸ், யாரும் எதிர்­பார்க்கா வண்­ணம் சாம்­பி­யன்ஸ் லீக்

போட்­டி­யில் சக்­கைப்­போடு போட்டு வரு­கிறது.

செல்­சியை வீழ்த்­தி­யதை அடுத்து, அது 'எச்' பிரி­வில் முன்­னிலை வகிக்­கிறது.

ஆட்­டத்­தின் தொடக்­கத்­தில் செல்சி ஆதிக்­கம் செலுத்­தி­யது.

ஆனால் செல்­சி­யை­விட யுவெண்­ட­சுக்கு கோல் போடும் வாய்ப்­பு­கள் அதி­கம் அமைந்­தன.

இருப்­பி­னும், கிடைத்த பல வாய்ப்­பு­களை யுவெண்­டஸ் விர­ய­மாக்­கி­யது.

இத்­தா­லிய லீக்­கில் நடப்­பது போலவே சாம்­பியன்ஸ் லீக்­கி­லும் நடந்­து­வி­டுமோ என்று யுவெண்­டஸ் ரசி­கர்­க­ளி­டையே அச்­சம் நில­வி­யது. ஆனால் அந்த அச்­சத்­துக்கு, பிற்­பாதி தொடங்­கி­ய­வு­டன் முற்­றுப்­புள்ளி வைத்­தார் கியேசா.

இதற்­கி­டையே, தோல்வி குறித்து செல்சி குழு­வி­னர் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

இனி அடுத்­த­டுத்த ஆட்­டங்­களில் சிறப்­பாக விளை­யாட செல்சி ஆட்­டக்­கா­ரர்­கள் முனைப்­பு­டன் இருப்­பர் என்­ப­தில் சந்்தே­க­மில்லை என்று காற்­பந்து விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!