பயர்னின் புயல் வேகத் தாக்குதலில் சுருண்ட டைனமோ கியேவ்

பயர்னின் புயல் வேகத் தாக்குதலில் சுருண்ட டைனமோ கியேவ்

1 mins read
6ce0da0c-bf7f-4273-b1d9-282fc4d04de1
பயர்ன் மியூனிக்கின் நான்காவது கோல். வலைக்குள் பந்து மட்டுமல்லாது, டைனமோ கியேவின் கோல்காப்பாளரும் புகுந்தார். படம்: இபிஏ -

மியூ­னிக்: பயர்ன் மியூ­னிக்­கின் வேகத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் உக்­ரே­னின் டைனமோ கியேவ் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் 5-0 எனும் கோல் கணக்­கில் படு­தோல்­வி­யைச் சந்­தித்­தது.

பயர்­னின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் ராபர்ட் லெவன்­டாவ்ஸ்கி இரண்டு கோல்­க­ளைப் போட்டு தமது குழு­வின் வெற்­றிக்கு வித்­திட்­டார். இந்த இரண்டு கோல்­களும் அவ­ரது 76வது, 77வது சாம்­பி­யன்ஸ் லீக் போட்டி கோல்­

க­ளா­கும்.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு பார்­சி­லோ­னா­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தி­லும் லெவன்­டாவ்ஸ்கி கோல் மழை பொழிந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யில் கள­மி­றங்­கிய கடந்த 18 ஆட்­டங்­களில் அவர் 24 கோல்­க­ளைப் போட்­டுள்­ளார்.

இதன்­மூ­லம் இவ்­வாண்­டின் ஆகச் சிறந்த காற்­பந்து வீரர் விருதை அவர் தட்­டிச் செல்­லும் சாத்­தி­யம் அதி­க­முள்­ள­தாக

நம்­பப்­ப­டு­கிறது.