பார்சிலோனாவின் சோகக் கதை தொடர்கிறது

பார்சிலோனாவின் சோகக் கதை தொடர்கிறது

1 mins read

லிஸ்பன்: லயனல் மெஸ்ஸி இருந்தவரை கொடிகட்டிப் பறந்த பார்சிலோனா தற்போது தொடர்ந்து பல அவமானங்களைச் சந்தித்து வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகலின் பென்ஃபிகாவிடம் அது 3-0 எனும் கோல் கணக்கில் சுருண்டது. இதனால் முதல் சுற்றுடன் போட்டியிலிருந்து வெளியேறும் அபாயம் பார்சிலோனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

காற்பந்து உலகில் ஜாம்பவானாக இருந்து பழக்கப்பட்ட பார்சிலோனாவுக்கு இந்த நிலை சொல்லொண்ணா துயரத்தைத் தந்துள்ளது.

தொடர்ந்து பந்தாடப்படுவதால் பயிற்றுவிப்பாளரும் ஹாலந்தின் முன்னாள் நட்சத்திரத் தற்காப்பு ஆட்டக்காரருமான ரோனல்ட் கூமனின் பதவி பறிபோகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவின் சாம்பியன்ஸ் லீக் பயணம் தொடருமா என்ற ஐயம் எழுந்துள்ளது.