ஐபிஎல்: அடுத்த சுற்றில் சென்னை

ஷார்ஜா: இந்­திய பிரி­மி­யர் லீக் டி20 கிரிக்­கெட் தொட­ரின் 'பிளே ஆஃப்' சுற்­றுக்­குள் முதல் அணி­யாக நுழைந்­தது சென்னை சூப்­பர் கிங்ஸ்.

சன்­ரை­சர்ஸ் ஹைத­ரா­பாத் அணிக்­கெ­தி­ராக நேற்று முன்­தினம் இரவு நடந்த ஆட்­டத்­தில் சென்னை அணி ஆறு விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­றது.

இத­னை­ய­டுத்து, 18 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லில் தனது முத­லி­டத்­தை­யும் அவ்­வணி வலுப்­ப­டுத்­திக்­கொண்­டது.

முத­லில் பந்­த­டித்த ஹைத­ரா­பாத் அணியை ஓட்­டம் குவிக்­க­வி­டா­மல் சென்னை அணி­யின் பந்­து­வீச்­சா­ளர்­கள் கடும் சவா­லாக விளங்­கி­னர்.

கடந்த ஆட்­டத்­தில் ஹைத­ரா­பாத் அணி­யின் ஆட்ட நாய­க­னாக மிளிர்ந்த தொடக்க ஆட்­டக்­கா­ரர் ஜேசன் ராயை இம்­முறை இரண்டு ஓட்­டங்­க­ளி­லேயே வெளி­யேற்­றி­னார் ஹேசல்­வுட்.

ஹைத­ரா­பாத் அணி­யின் இன்­னொரு தொடக்க வீர­ரான ரித்­தி­மான் சாஹா அதி­க­பட்­ச­மாக 44 ஓட்­டங்­களை எடுத்­தார். 20 ஓவர் முடி­வில் அவ்­வணி ஏழு விக்­கெட் இழப்­பிற்கு 134 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது.

ஹேசல்­வுட் மூன்று விக்­கெட்டு­க­ளை­யும் பிராவோ இரண்டு விக்­கெட்­டு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

தொடர்ந்து பந்­த­டித்த சென்னை அணிக்கு வழக்­கம்­போல இந்த முறை­யும் ருது­ராஜ் கெய்க்­வாட்­டும் டு பிளஸ்­ஸி­யும் சிறப்­பான தொடக்­கம் தந்­த­னர். ருது­ராஜ் 45 ஓட்­டங்­க­ளை­யும் டு பிளஸ்ஸி 41 ஓட்­டங்­க­ளை­யும் எடுத்­த­னர்.

இரு­ப­தா­வது ஓவ­ரில் இமா­லய சிக்­சர் அடித்து, ஆட்­டத்தை முடித்து வைத்­தார் சென்னை அணித்­த­லை­வர் மகேந்­திர சிங் டோனி (14*). இத­னை­ய­டுத்து, இரண்டு பந்­து­கள் எஞ்­சிய நிலை­யில், இந்­தப் பரு­வத்­தில் சென்னை அணி தனது ஒன்­ப­தா­வது வெற்­றியை ஈட்­டி­யது.

இதுவரை ஐபிஎல் தொடரின் 12 பருவங்களில் பங்கேற்றுள்ள சென்னை அணி, அரையிறுதி/பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்று இருப்பது இது 11வது முறை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!