சிட்னி: கொரோனா பாதுகாப்பு வளையக் கட்டுப்பாடுகளைச் சுட்டி, அணித்தலைவர் ஜோ ரூட் உட்பட இங்கிலாந்து வீரர்கள் சிலர் ஆஸ்திரேலியா செல்வது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், திட்டமிட்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் தெரிவித்திருக்கிறார். "ஜோ வருவாரோ இல்லையோ, டிசம்பர் 8ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும். இங்கு வந்து விளையாட வேண்டும் என்று எந்த இங்கிலாந்து வீரரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை," என்றார் டிம்.
'திட்டமிட்டபடி ஆஷஸ் போட்டி நடைபெறும்'
1 mins read