சென்னையில் பூஜா ஹெக்டே

சென்னையில் பூஜா ஹெக்டே

1 mins read
3aa75e44-9284-4198-adb6-6df208dc6e7d
-

நெல்­சன் இயக்­கத்­தில் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்­தில் நாய­கி­யாக நடிக்­கும் பூஜா ஹெக்டே நவம்­பர் மாதம் மற்ற படங்­களில் நடிக்க நாட்­களை ஒதுக்கி இருப்­ப­தால் இந்த மாதம் முழு­வ­தும் விஜய்­யு­டன் நடிக்க ஒப்­பந்­தம் செய்து சென்னையில் தங்கி இருக்­கி­றார்.

அவர் நடிக்க வேண்­டிய காட்சி­கள் அனைத்­தும் இந்த மாதத்­திற்­குள் எடுத்­தாக வேண்­டும் என்­ப­தால் படக்­கு­ழு­வி­னர் அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் விறு­வி­றுப்­பாக செய்து வரு­கின்­ற­னர்.

நவம்­பர் மாதத்­தில் மகேஷ்­பாபு நடிக்­கும் படம், பவன் கல்­யா­ணின் 'பாவ­தே­யுடு பகத்­சிங்' போன்ற படங்­களில் நடிக்க இருக்கிறார் பூஜா ஹெக்டே.

ஏற்­கெ­னவே சிரஞ்­சீவி­யு­டன் 'ஆச்­சா­ரியா', பிர­பா­ஸு­டன் 'ராதே ஷ்யாம்', 'மோஸ்ட் எலி­ஜி­பில் பேச்­சு­லர்', 'சர்க்­கஸ் ஹிந்தி' என நான்கு படங்­களில் நடித்து முடித்­தி­ருக்­கி­றார் பூஜா ஹெக்டே.

இவர் 2020ஆம் ஆண்டு 'மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா' என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று புகழ் பெற்றவர். தமிழில் 'முகமூடி' படத்தில் முதன் முதலாக நடித்து இருந்தார். அந்தப் படம் தோல்வி அடைந்தது.