ஹேமில்டன்: 11வது இடத்தில் வெல்வது சிரமம், முடியாததல்ல

1 mins read

இஸ்­தான்­புல்: துருக்கி 'கிராண்ட் ப்ரி' போட்­டி­யில் 11வது இடத்­தி­லி­ருந்­தா­லும் முடிந்­த­வரை முழு வீச்சில் ஓட்­டப்­போ­வ­தா­க­வும் போட்டியை வெல்­வது சிர­மம்தான் என்றாலும் சாதிக்கமுடி­யா­த­தல்ல என்று `ஃபார்முலா 1' நட்சத்திரம் லூயிஸ் ஹேமில்­டன் கூறி­யுள்­ளார்.

ஹேமில்­ட­னின் 'மெர்சிடிஸ்' வாகனத்­தின் இயந்­திரத்தின் செயல்முறையை மாற்­றி­ய­தால் துருக்கி போட்டி தொடங்­கு­வ­தற்கு முன்­னர் அவ­ரின் நிலை 10 இடங்­கள் இறக்கப்பட்டது.

`ஃபார்முலா 1' போட்­டி­களில் பங்­கேற்­ப­தற்கு முன்­னர் 2006ஆம் ஆண்டு 'ஜிபி2' போட்­டி­யில் 19வது இடத்­தி­லி­ருந்து இரண்­டாம் இடத்திற்கு வந்த பெருமை ஹேமில்­டனுக்கு உண்டு. சென்ற ஆண்டு துருக்கியில் நடைபெற்ற 'கிராண்ட் ப்ரி' போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த ஹேமில்டன் வெற்றி கண்டார். போட்டி தொடங்குவதற்கு முன் அவர் ஆறாம் நிலையில் இருந்தார். மழையால் அப்போட்டியில் பந்தயத் தடம் ஈரமாக வழுக்கும் தன்மையுடன் இருந்தது.