திகைக்க வைத்த பிஞ்சுகள்; வியப்பில் ஆழ்த்திய 'தல' டோனி

திகைக்க வைத்த பிஞ்சுகள்; வியப்பில் ஆழ்த்திய 'தல' டோனி

1 mins read
b65b5bb7-8912-40eb-b329-ec934bc65e73
இந்தப் பிஞ்சு ரசிகர்களின் அன்பால் திகைத்துப்போன டோனி, எதிர்பாராத பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தார். படம்: இணையம் -

துபாய்: பரபரப்பான 'பிளே ஆஃப்' சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, ஒன்பதாவது முறையாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்று பவுண்டரிகளை விளாசினார் தம் அணியினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தார் டோனி.

இந்நிலையில், அரங்கிலிருந்து ஆட்டத்தை நேரில் பார்த்த குழந்தைகள் இருவர், சென்னை அணியின் வெற்றிபெற்றதை அடுத்து, உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர்விட்டு அழுதனர்.

அதனைக் கண்ட டோனி, பந்து ஒன்றில் நினைவுக் கையெழுத்திட்டு, அதனை அக்குழந்தைகளிடம் தூக்கிப் போட்டார். அதனைப் பெற்றுக்கொண்ட குழந்தைகளின் முகங்களில் மீண்டும் சிரிப்பு மலர்ந்தது. இவ்விரு காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்