புத்துயிருடன் மீண்டுவந்தது ஜப்பான்

சைத்­தாமா (ஜப்­பான்): ஆசிய கண்டத்­திற்­கான உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் தகுதிச் சுற்று ஆட்­டத்­தில் ஆஸ்­திரே­லி­யாவை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றுள்­ளது ஜப்­பான். இதற்குமுன் எதிர்­பாரா வகை­யில் தடு­மா­றி­வந்த ஜப்­பான் இவ்­வாட்­டத்­தில் மீண்­டு­வந்­தது.

பி பிரி­வின் முதல் மூன்று ஆட்டங்­களில் சீனாவை மட்­டும் வென்­றது ஜப்­பான். மற்ற இரண்டு ஆட்­டங்­களில் ஓமா­னி­ட­மும் சவூதி அரே­பி­யா­வி­ட­மும் தோல்­வி­யுற்­றது. இத­னைத் தொடர்ந்து ஜப்­பான் உலகக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெ­றும் வாய்ப்பு குறைந்­தது போல் இருந்­தது. ஆனால் இது­வரை அபா­ர­மாக ஆடி­வந்த ஆஸ்­தி­ரே­லி­யாவை வென்று தனக்­குப் புத்­து­யிர் அளித்­துக்­கொண்­டுள்­ளது.

ஜப்­பா­னுக்கு முதல் கோலை அடித்­தார் ஆவோ டனக்கா. அதன்­பின்­னர் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அய்­டின் ஹ்ருஸ்­டிச் ஆட்­டத்­தைச் சமப்­படுத்­தி­னார். அதற்­குப் பிறகு ஆட்­டத்­தின் கடைசி சில நிமிடங்­களில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அசிஸ் பெஹிச் சொந்த வலைக்­குள் பந்தை அனுப்­பி­ய­தால் ஜப்­பான் வென்­றது.

1998ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எல்லா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கும் தகுதிபெற்றுள்ளது ஜப்பான். அதற்கு முன்பு உலகக் கிண்ணத்திற்குச் சென்றதில்லை. 2002ஆம் ஆண்டு போட்டியை ஜப்பான், தென்கொரியா ஆகிய இரண்டும் சேர்ந்து ஏற்று நடத்தின.

உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் இது­வரை இரண்­டாம் சுற்­றைத் தாண்­டா­விட்­டா­லும் பெரிய அணி­களுக்­குப் பலத்த போட்டி தரும் வகை­யில் ஆடி­வந்­துள்­ளது உல­க­அளவில் பெயர் பதித்­துள்ள சில அபார வீரர்களை உரு­வாக்­கி­யி­ருக்­கும் ஜப்­பான். ஆசிய காற்­பந்­துக் கிண்­ணத்தை ஆக அதிக முறை­யும் வென்­றுள்­ளது இவ்­வணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!