64 ஆண்டு வேதனையைத் தீர்க்க வேல்ஸ் உறுதி

64 ஆண்டு வேதனையைத் தீர்க்க வேல்ஸ் உறுதி

1 mins read

டலின் (எஸ்­டோ­னியா): ஐரோப்­பிய கண்­டத்­திற்­கான உல­கக் கிண்­ணக் காற்பந்துப் போட்டி தகுதியாட்­டத்­தில் எஸ்­டோ­னி­யாவை 1-0 எனும் கோல் கணக்­கில் வென்­றுள்­ளது வேல்ஸ். கோலை அடித்­த­வர் கீஃபர் மோர். இ பிரி­வில் மூன்­றாம் இடத்­தில் உள்ள வேல்ஸ், இரண்­டாம் இடத்­தில் உள்ள செக் குடியரசு பெற்றுள்ள அதே புள்­ளி­களை எடுத்துள்ளது. இத்­த­னைக்­கும் வேல்ஸ் ஓர் ஆட்­டம் குறை­வாக ஆடி­யுள்­ளது.

தகு­திச் சுற்­றின் இறு­தி­யில் பிரிவில் இரண்­டாம் இடத்­தைப் பிடித்­தால் வேல்ஸ் 'பிளே­ஆஃப்' எனும் கடைசி தகு­திச் சுற்­றுக்­குச் செல்­லும். அதன் மூலம் 64 ஆண்டு­களில் முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெற வாய்ப்புள்ளது வேல்­ஸுக்கு.

பிரிவில் முத­லி­டத்­தைப் பிடித்து நேர­டி­யாக உல­கக் கிண்­ணத்­திற்­குச் செல்­ல­வும் அணிக்கு வாய்ப்பு உள்­ளது, ஆனால் அது சிர­மம். உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெ­றா­மல் இருந்­தா­லும் கடந்த சுமார் 10 ஆண்­டு­க­ளாக வேல்­ஸின் விளை­யாட்டு பெரி­தும் மேம்­பட்டுள்ளது.

2016ஆண்­டில் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக யூரோ போட்­டிக்­குத் தகு­தி­பெற்­றது வேல்ஸ். அதில் அரை­யி­று­திச் சுற்றுவரை முன்­னே­றி­யது. இவ்­வாண்டு யூரோ 2020லும் அணி இடம்­பெற்­றது வேல்ஸ்.