தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேசன் மவுன்ட்: இது வெறும் ஆரம்பமே

1 mins read
3c750d0e-0205-49d5-a322-95c78d995109
மவுன்ட். கோப்புப்படம்/ஏஎஃப்பி -

லண்­டன்: 'பலோன் டு' வோர்' எனப்­படும் உல­கின் ஆகச் சிறந்த காற்­பந்து விளை­யாட்­டா­ள­ரைத் தேர்ந்­தெ­டுக்­க முன்மொழியப்பட்டுள்ள 30-பேர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது மறக்­க­முடியாத ஒரு நிகழ்­வென செல்சி அணி­யின் இளம் வீரர் மேசன் மவுன்ட் கூறி­யுள்­ளார். 22 வயது மவுன்ட் கடந்த ஈராண்­டு­க­ளா­கத்­தான் செல்­சி­யின் முதல்நிலை அணி­யில் இடம்­பெற்று வரு­கி­றார்.

அதற்குமுன் பெரும்­பா­லும் அணி­யின் இளம் வீரர்­க­ளுக்­கான பிரி­வு­களில் இடம்­பெற்­றார்.

இந்­தக் கால­கட்­டத்­தில் வெகு விரை­வில் செல்­சிக்கு சிறப்­பாக ஆடி­யது மட்­டு­மின்றி இங்­கி­லாந்து நட்­சத்­தி­ர­மா­க­வும் அவதரித்தார். இப்­போது 'பலோன் டு' வோர்' விரு­துக்­கும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளார்.

"இத்­தனை ஆண்­டு­க­ளா­கக் கடி­ன­மாக உழைத்­த­தற்­கும் முழு­மை­யாக என்னை அர்ப்­ப­ணித்­ததற்கும், இப்­படி ஒரு நிகழ்­வைப் பார்க்­கும்போது அவை பலன் தந்துள்­ளன எனத் தெரி­கிறது. இது வெறும் ஆரம்­பமே, இத்­துடன் நின்­று­வி­டப் போவதில்லை," என்று மவுன்ட் பெருமையுடன் கூறினார்.