அண்ணனுக்குச் சிறை, தம்பிக்கு கொரோனா

மட்ரிட்: அண்மையில் ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் வாகை சூடிய பிரான்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தற்காப்பு விளையாட்டாளர்களான லூக்கஸ் ஹெர்னாண்டஸ், தியோ ஹெர்னாண்டஸ் சகோதரர்களுக்கு இப்போது நேரம் சரியில்லை போலும்!

குடும்ப வன்முறை தொடர்பில் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 25 வயது லூக்கசுக்கு ஸ்பானிய நீதிமன்றம் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவிற்காக விளையாடி வரும் லூக்கஸ் இன்னும் பத்து நாள்களுக்குள் சிறை செல்ல வேண்டும். ஆயினும், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே, இத்தாலியின்   ஏசி மிலான் குழு சார்பில் விளையாடி வரும் 24 வயது தியோவிற்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!