அதிக கோல்: பெலேவை விஞ்சிய சுனில்

மாலே: அனைத்துலக காற்பந்துப் போட்டிகளில் அதிக கோல் அடித்தோர் பட்டியலில் முன்னாள் பிரேசில் நட்சத்திரம் பெலேவை முந்தினார் இந்திய அணியின் தலைவர் சுனில் சேத்ரி, 37 (படம்).

தெற்காசிய காற்பந்துக் கூட்டமைப்பு வெற்றியாளர் போட்டிகளில் நேற்று முன்தினம் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வென்றது. இதில் சுனிலின் பங்கு இரண்டு கோல்கள். இவற்றுடன் சேர்த்து அனைத்துலகப் போட்டிகளில் இதுவரை 79 கோல்களை அடித்து இருக்கும் சுனில், அதிக கோல் அடித்தோர் பட்டியலில் ஸாம்பியா வீரர் காட்ஃபிரீ சித்தலுவுடன் ஆறாமிடத்தைப் பகிர்ந்து கொண்டார். கிறிஸ்டியானோ ரொனாலா 115 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். மெஸ்ஸி (80 கோல்கள்) ஐந்தாமிடத்திலும் பெலே (77 கோல்கள்) பத்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!