ஸ்டார்ஹப்பில் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள்

ஸ்டார்ஹப்பில் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகள்

1 mins read
ac762077-3406-41e8-b30d-2c4ab9e3bb42
'இந்தியன்+' திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. படம்: இணையம் -

இம்மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் ஓமானிலும் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகளை சிங்கப்பூரில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார்ஹப் நிறுவனம் பெற்றிருக்கிறது.

மொத்தம் 45 போட்டிகளையும் 'ஹாட்ஸ்டார்' செயலி வழியாகக் காணலாம். அத்துடன், 'ஸ்டார்ஹப் டிவி+' தளத்தில் 'இந்தியன்+' திட்டத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் எல்லாப் போட்டிகளையும் இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.

புதிய ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்கள், மாதம் 15 வெள்ளி என்ற கட்டணத்தில் 'இந்தியன்+' திட்டத்தில் இணையலாம்.

குறிப்புச் சொற்கள்