இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்

1 mins read
f1101bea-5c54-4990-88fc-35a632fe8d86
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஐபிஎல் இறுதிப்போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவி பரோத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. படம்: டுவிட்டர் -

அகமதாபாத்: பத்தொன்பது வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும் சௌராஷ்டிரா அணிக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடி வந்தவருமான அவி பரோத் மாரடைப்பால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 29.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தமது வீட்டில் ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

ஐந்து நாள்களுக்குமுன் ராஜ்கோட்டில் நடந்த ரிலையன்ஸ் ஜி-1 டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பரோத் 43 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசி, சௌராஷ்டிர அணிக்குக் கிண்ணத்தை வென்று தந்தது குறிப்பிடத்தக்கது.

விக்கெட்காப்பாளரும் பந்தடிப்பாளருமான பரோத், சௌராஷ்டிரா அணிக்காக 21 ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளிலும் 17 ஒருநாள் போட்டிகளிலும் 11 உள்ளூர் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.