அட்லெட்டிகோவை மூழ்கடித்த இரு கோல் நாயகன் சாலா

மட்­ரிட்: சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் ஸ்பெ­யி­னின் அட்­லெட்­டிகோ மட்­ரிட் குழுவை 3-2 எனும் கோல் கணக்­கில் லிவர்­பூல் போராடி வென்­றது.

முதற்­பா­தி­யில் ஒரு கோலை­யும் பிற்­பா­தி­யில் வெற்றி கோலை­யும் போட்டு லிவர்­பூ­லின் வெற்­றிக்கு வித்­திட்­டார் நட்­சத்­திர வீரர் முகம்­மது சாலா.

ஆட்­டத்­தின் 8வது நிமி­டத்­தி­லேயே சாலா போட்ட கோல் விளை­யாட்­ட­ரங்­கத்­தில் கூடி­யி­ருந்த அட்­லெட்­டிகோ ரசி­கர்­களை அதிர்ச்­சி­யில் உறைய வைத்­தது.

இந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து அவர்­கள் மீள்­வ­தற்­குள் லிவர்­பூல் அதன் இரண்­டா­வது கோலைப் போட்­டது. 13வது நிமி­டத்­தில் நபி கேய்ட்டா அனுப்­பிய பந்து மின்­னல் வேகத்­தில் வலைக்­குள் சென்­றது. இனி லிவர்­பூ­லைத் தடுத்து நிறுத்த முடி­யாது என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­ட­போது அட்­லெட்­டி­கோ­வின் அன்­டொய்ன் கிரீஸ்­மன் அடுத்­த­டுத்து இரண்டு கோல்­க­ளைப் போட்டு

ஆட்­டத்­தைச் சமன் செய்­தார்.

பிற்­பாதி ஆட்­டம் முடி­வ­தற்­குள் மூன்­றா­வது கோலைப் போட்டு முன்­னிலை வகிக்க வேண்­டும் என்ற முனைப்­பு­டன் அட்­லெட்­டிகோ தாக்­கு­த­லைத் தீவி­ரப்

படுத்­தி­யது. ஆனால் விழிப்­பு­டன் இருந்த லிவர்­பூல் கோல்­காப்­பா­ளர் அதன் கோல் முயற்­சி­களை முறி­ய­டித்­தார்.

இடை­வே­ளை­யின்­போது இரு குழுக்­களும் தரப்­புக்கு இரண்டு கோல்­க­ளைப் போட்டு சம­நி­லை­யில் இருந்­தன.

பிற்­பாதி ஆட்­டம் தொடங்கி சில நிமி­டங்­க­ளி­லேயே அட்­லெட்­டிகோ

குழு­வுக்­குப் பேரிடி விழுந்­தது.

தப்­பாட்­டம் கார­ண­மாக கிரீஸ்­ம­னுக்கு சிவப்பு அட்டை காட்­டப்­பட்டு ஆட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்.

நட்­சத்­திர வீரரை இழந்­தது மட்­டு­மல்­லாது, மீத­முள்ள ஆட்­டத்தை அட்­லெட்­டிலோ வெறும் பத்து ஆட்­டக்

காரர்­க­ளு­டன் தொட­ரும் நிலை ஏற்­பட்­டது. இது ஆட்­டத்­தின் போக்கை மாற்­றி­யது. அட்­லெட்­டி­கோ­வால் நினைத்­த­படி தாக்­கு­த­லில் முழு­வீச்­சு­டன் இறங்­க­மு­டி­யா­மல் போனது.

மாறாக, தற்­காப்­பில் கவ­னம் செலுத்த வேண்­டிய கட்­டா­யம் அதற்கு ஏற்

பட்­டது. சம­நிலை கண்டு குறைந்­தது ஒரு புள்­ளி­யை­யா­வது எடுக்க அட்­லெட்­டிகோ போட்ட திட்­ட­மும் நிறை­வே­றா­மல் போனது.

பெனால்டி எல்­லைக்­குள் இருந்த லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர் டியோகோ ஷோட்டா மீது அட்­லெட்­டி­கோ­வின் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் மாரியோ ஹெர்­மோசோ மோதி அவ­ரைக் கீழே விழ­வைத்­தார். இதன் கார­ண­மாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை எடுத்த சாலா, லிவர்­பூ­லின் மூன்­றா­வது கோலைப் போட்­டார். ஆட்­டம் முடிய ஏறத்­தாழ பத்து நிமி­டங்­கள் இருந்­த­போது பெனால்டி எல்­லைக்­குள் அட்­லெட்­டி­கோ­வின் ஹோசே மரியா ஜிமெ­னேஸை லிவர்­பூ­லின் ஷோட்டா கீழே தள்­ளி­விட்­ட­தாக முத­லில் கரு­திய நடு­வர், அட்­லெட்­டி­கோ­வுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்­கி­னார்.

ஆனால் பிறகு காணொளி மூலம் சரி­பார்த்த பிறகு, அந்த முடிவை

நடு­வர் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டார்.

ஆட்­டத்தை லிவர்­பூல் கைப்­பற்­றி­ய­தும் லிவர்­பூ­லின் நிர்­வாகி யர்­கன் கிளோப்­பு­டன் கைகு­லுக்­கா­மல் அட்­லெட்­டி­கோ­வின் நிர்­வாகி டியேகோ சிமோனே தமது அணி­யின் ஓய்வு அறைக்­குத் திரும்பி, அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!