பிரசல்ஸ்: பெல்ஜியத்தின் கிளப் புருஜ் குழுவை 5-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி
பந்தாடியது.
இந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் சிட்டி காட்டிய தீவிரம் புருஜ் குழுவைக்
கதிகலங்க வைத்தது.
முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் இருக்கும் சிட்டி ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கோல் போட்டது.
இடைவேளைக்குக் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை கோலாக்கி னார் ரியாட் மாரேஸ்.
பிற்பாதியிலும் சிட்டி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி கோல்
வேட்டையில் இறங்கியது.
கைல் வாக்கர், கோல் பால்மர் போட்ட கோல்கள் சிட்டியின் நிலையை வலுப்படுத்தியது.
பால்மர் மாற்று ஆட்டக்கார
ராகக் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே 19 வயது பால்மரின் முதல் சாம்பியன்ஸ் லீக் கோல் ஆகும்
ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் புருஜ் குழுவின் ஹான்ஸ் வனகேன் போட்ட கோல் சொந்த விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த புருஜ் ரசிகர்களுக்கு ஆறுதலைத் தந்தது.
ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் ரியாட் மாரேஸ் தமது இரண்டாவது கோலைப் போட்டு புருஜ் குழுவின் கதையை முடித்து வைத்தார்.
"சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று. நாங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறோம். இன்னும் மூன்று புள்ளிகளைப் பெற்றால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இன்னும் பிரகாசமாக இருக்கும்," என்று சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா பெருமிதத்துடன் தெரிவித்தார்.