கிரிக்கெட் மீது காற்பந்து கண்; ஐபிஎல் மீது மான்­செஸ்­டர் குறி

இந்­தி­யன் பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) தொடரில் இப்­போது எட்டு அணி­கள் பங்­கேற்று வரும் நிலை­யில், அடுத்த ஐபி­எல் தொட­ரி­ல் இருந்து 10 அணி­கள் பங்­கேற்­கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் கழகம் (பிசி­சிஐ) ஏற்­கெனவே அறி­வித்­துள்­ள­து.

அந்த அணி­களை வாங்­கு­வ­தற்­கான ஏலக்­குத்­தகை ஆவ­ணங்­க­ளை­யும் அது வெளியிட்டு உள்­ளது.

ஓர் அணி­யின் தொடக்க விலை ரூபாய் 2,000 கோடி என பிசி­சிஐ நிர்­ண­யித்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது. அணி­களை வாங்கு வதற்­கான ஏலத்தொகையைத் தாக்­கல் செய்ய முத­லில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவ­கா­சம் அளிக்­கப்­பட்­டது.

அந்த அவ­கா­சம் பின்­னர் அக்­டோ­பர் 10ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டது. அதன்­ பிறகு இரண்­டா­வது தட­வை­யாக கால அவ­கா­சத்தை நீட்­டித்த பிசிசிஐ, ஏலத்தொகையைத் தாக்­கல் செய்ய அக்­டோ­பர் 20ஆம் தேதியே கடை­சி­நாள் என அறி­வித்­தது.

இந்­த­ நி­லை­யில், உலகப் புகழ்­பெற்ற காற்பந்­தாட்ட அணி­யான மான்­செஸ்­டர் யுனை­டெட் அணி­யின் உரி­மை­யா­ளர்­களான அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த கிளா­சர் குடும்­பம், ஐபி­எல் அணி ஒன்றை வாங்க ஆர்வம் காட்­டி­ உள்ள­தா­க­வும் அதன்­பொ­ருட்டே ஏலக்­குத்­தகை தாக்­க­லுக்­கான கால அவகாசம் நீட்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் பிசி­சிஐ வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

அணி­களை வாங்­கு­வ­தற்­கான ஏலக்­குத்­தகை தாக்­கல் கடைசி தேதி முடி­வடைந்­து­விட்ட நிலை­யில், ஆவ­ணத்தை வாங்­கி­யவர்­கள் ஏலத்­தொ­கையை 25ஆம் தேதிக்­குள் தாக்­கல் செய்­வர் என்­றும் அடுத்த நாள் ஏலத்­தில் வென்­ற­வர்­கள் விவ­ரம் வெளி­யா­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதானி குழு­மம், டோரண்ட் பார்மா, அர­பிந்தோ பார்மா, ஹிந்­துஸ்­தான் டைம்ஸ் மீடியா, ஜிண்­டால் ஸ்டீல் ஆகிய பல்­வேறு நிறு­வ­னங்­கள் புதிய ஐபி­எல் அணி­களை வாங்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளன.

வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் ஐபி­எல் அணியை வாங்­க­லாம். அவர்கள் ஏலத்தில் வெற்றிபெற்றால் இந்தியாவில் நிறு வனத்தை நிறுவ வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!